கம்பம் நகராட்சியில் மத நல்லிணக்கத்தை வலியுறுத்தும் சமத்துவ பொங்கல் விழாவில் தேனி எம்பி தேனி மாவட்டம் கம்பம் நகராட்சியில் மத நல்லிணக்கத்தை வலியுறுத்தும் விதமான சமத்துவ பொங்கல் விழா கோலாகலமாக நடைபெற்றது
இந்த விழாவிற்கு நகராட்சி நகர் மன்ற தலைவர் வனிதா நெப்போலியன் தலைமை தாங்கினார் நகராட்சி ஆணையாளர் து. உமா சங்கர் நகர் மன்ற துணைத் தலைவர் சுனோதா செல்வகுமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்
இந்த விழாவில் மத நல்லிணக்கத்தை வலியுறுத்தும் விதமாக கிறிஸ்தவ பாதிரியார் பள்ளிவாசல் இமாம் ஆகியோர் பொங்கல் விழாவில் பங்கேற்றவர்களுக்கு தேனி பாராளுமன்ற உறுப்பினர் தங்க தமிழ் செல்வன் எம் பி சிறப்பு விருந்தினராக பங்கேற்று பொங்கல் சீர்வரிசை பொருட்களை வழங்கினார்.
இந்த நிகழ்ச்சியில் பொறியாளர் அய்யனார் மேலாளர் சுகாதார அலுவலர் அரசகுமார் ஆய்வாளர் சக்திவேல் வழக்கறிஞர் துரை நெப்போலியன் தலைமை செயற்குழு உறுப்பினர் குரு குமரன் துணிந்து நில் அறக்கட்டளை நிறுவனத் தலைவர் மனித நேயர் பண்பாளர் எம் வேல் பாண்டியன் உள்பட நகர்மன்ற கவுன்சிலர்கள் பலர் கலந்து கொண்டனர்.