திருவாரூர் துர்வாசகர் ஆலயத்தில் பால ஐயப்பனுக்கு ஜோதி பூஜை
திருவாரூர் கீழவீதியில் உள்ள பழமை வாய்ந்த துர்வாசகர் மகரிஷி ஆலயம் என்று அழைக்கப்படும் அருள்மிகு பஞ்சின் மெல்லடியாள் சமேத தூவாயநாதர் ஆலயத்தில் உள்ள அருள்மிகு பால ஐயப்பனுக்கு நேற்று 15.01.2026 வியாழக்கிழமை இரவு தை மாத பிறப்பு மற்றும் மகரஜோதியை முன்னிட்டு பால ஐயப்பனுக்கு மஞ்சள் பால் தயிர் சந்தனம் போன்ற அபிஷேக பொருட்களைக் கொண்டு சிறப்பு அபிஷேகம் நடைபெற்று பின் சன்னதி வாசலில் மேலே அழைக்கப்பட்டுள்ள மகா தீபத்தில் ஜோதி தீபம் ஏற்றப்பட்டது. அதனைத் தொடர்ந்து சிறப்பு தீபாரதனை நடைபெற்று பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.