செங்குன்றம் செய்தியாளர்
மாதவரம் புனித அன்னாள் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 78 வது சுதந்திர தினம் இந்நிகழ்வில் கல்லூரியின் முதல்வர் முனைவர் அன்னம்மாள் அற்புதமேரி தேசிய கொடியேற்றி மரியாதை செலுத்தினார்.
கல்லூரியின் தலைவர் அன்னை முனைவர் லீமா ரொசாரியோ பேசும் போது உண்மையான சுதந்திரம் என்பது ஒருவன் தனக்கு தானே கண்காணிப்பாளனாக இருந்து தனக்கும் பிறருக்கும் பொறுப்புள்ளவனாக வாழ்ந்து, அகம் மற்றும் புறச் சுதந்திரத்தை பேணி காக்க வேண்டும் என்று கூறினார்.
தொடர்ந்து மாணவர் பேரவை தலைவர்களின் பதவியேற்பு விழாவும், போட்டிகளும் கலை நிகழ்ச்சிகளும் பேரணியும் , கல்லூரியின் வளர்ச்சிக்கு மாணவர் பேரவை தலைவர்கள் அனைவரும் ஒன்றிணைந்து பாடுபடுவோம் என்று உறுதி மொழி எடுத்தனர்.
இதில் முனைவர் அன்னம்மாள் அற்புதமேரி, கல்லூரியின் வளர்ச்சி அதிகாரி பெனடிக்ட் குமாரி , கல்லூரியின் மக்கள் தொடர்பு அதிகாரி அர்ச்சனா , கல்லூரியின் ஆலோசகர் முனைவர் முருகேசன் ஆகியோர் கலந்துகொண்டு விழாவை சிறப்பித்தனர் .