மதுரை புதுஜெயில் ரோடு மில்காலனி யில் 78வது சுதந்திரதின விழா கொண்டாடப் பட்டது. மில்காலனியில் சங்கத்தலைவர் முத்துக்குமார், கமிட்டி உறுப்பினர்பரமசிவம் ஆகியோர் தேசியக்கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினர். செயலாளர் ஷியாம்சுந்தர், இணைச்செயலாளர் மல்லிகா, சங்கரகோமதி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
துணைத்தலைவர் ராஜசேகரன் வரவேற்று பேசினார். செயலாளர் நித்யானந்தம், பொருளாளர் ஏஞ்சல் தவசெல்வி,
அனிதா ஆகியோர் சிறப்புரையாற்றினர்.
விழாவில் கமிட்டி உறுப்பினர்கள் பரமசிவம், நிம்மி, வைஜெயந்தி, கோபிநாத், டேனியேல் தனஞ்செயன், கருப்பசாமி, இந்திராணி, நளினி, ராமநாதன், அய்யாப்பிள்ளை ஆகியோர்
கலந்து கொண்டனர்.
விழாவில் பங்கேற்றவர்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டது விழாவில் கலந்து கொண்ட அனைவருக்கும் சங்கத்தலைவர் முத்துக்குமார் நன்றி கூறினார்.