ராஜபாளையம்
எ .கா .த .தர்மராஜா பெண்கள் கல்லூரியும் நியூ சென்சுரி புத்தக நிறுவனமும் இணைந்து நடத்தும் புத்தக கண்காட்சி கல்லூரி கலையரங்கத்தில் 12.08.2024 முதல் 14.08.2024 வரை மூன்று நாள் நிகழ்வாக சிறப்பாக நடைபெற்றது .
கல்லூரி தாளாளரின் தாயார் ரமணி தர்மகிருஷ்ணராஜா அவர்கள் புத்தக கண்காட்சியை துவக்கி வைத்தார்கள். கல்லூரியின் தலைவர் கீதா அவர்களும் கலந்து கொண்டு புத்தக கண்காட்சியை சிறப்பித்தார்கள் .
கல்லூரி பேராசிரியர்கள் மற்றும் மாணவிகள் புத்தக கண்காட்சியை பார்வையிட்டு தங்களுக்கு தேவையான புத்தகங்களை வாங்கி பயனடைந்தனர்.
எ.கா .த .தர்மராஜா கல்வி குழுமத்தில் உள்ள அனைத்து பள்ளி ஆசிரியர்களும் ,மாணவசெல்வங்களும் புத்தக கண்காட்சியை கண்டு களித்தனர் .புத்தக கண்காட்சி மிகவும் பயனுள்ளதாக இருந்தது . என்று.மாணவிகள்.
கூறினர்