தாராபுரம் செய்தியாளர் பிரபு
செல்:9715328420
திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அருகே வரப்பாளையம் கிராமத்தில் திருப்பூர் தெற்கு மாவட்டம் தாராபுரம் வட்டார காங்கிரஸ் கமிட்டி சார்பில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தை காப்போம் என்பதை வலியுறுத்தி தெருமுனைப் பிரச்சாரம் கூட்டம் நடைபெற்றது.
இந்த கூட்டத்திற்கு திருப்பூர் தெற்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் தென்னரசு தலைமை தாங்கினார். இந்நிகழ்ச்சியில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் காளிமுத்து மற்றும் வட்டார காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் முத்துக்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
நடைபெற்ற நிகழ்ச்சிக்கு சிவகங்கை எம் பி கார்த்திக் சிதம்பரம் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். காங்கிரஸ் கட்சி ஆட்சியில் இருக்கும் போது செய்த சாதனைகளை எடுத்துரைத்தார். காங்கிரஸ் கட்சி மூத்த நிர்வாகிகளை பாரதிய ஜனதா கட்சி மோடிக்கு பிடிக்காது.
பாரதி ஜனதா கட்சியின் ஆட்சியில் உள்ள மோடி அரசு ஒவ்வொரு திட்டத்திற்கும் பெயர் மாற்றம் செய்து வருகிறது. அந்த வகையில் தான் 100 நாள் திட்டத்தில் இருந்த காந்தியின் பெயரை மாற்றி வாயில் நுழையாத அளவிற்கு பெயரை வைத்துள்ளனர். அதேபோல் ரூபாய் நோட்டில் உள்ள காந்தியின் படத்தையும் விரைவில் நீக்கி விடுவார்கள் நாம் தான் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் எனக் கூறினார்.
மேலும் செய்தியாளர்களிடம் கூறுகையில்,
இந்தியா கூட்டணியில் திமுக அங்கம் வைக்கிறது தமிழ்நாட்டில் திமுக தலைமையில் காங்கிரஸ் அங்கம் வைக்கிறது. திமுக காங்கிரஸ் கட்சியில் கூட்டணி பிரிவினை ஏற்பட்டுள்ளது போல் சமூக வலைதளத்தில் பரவி வருகிறது ஊடகப் பிரிவில் யார் இருக்கிறார்கள் என்பதை நீங்கள் பெரிதாக எடுத்துக் கொள்ளக் கூடாது அதிகாரப்பூர்வமாக காங்கிரஸ் கட்சி என்ன சொல்கிறதோ அதற்குத்தான் ஐவர் குழு அமைத்துள்ளோம் .
திராவிட முன்னேற்றக் கழகத்தோடு பேச்சுவார்த்தையில் உள்ளனர். காங்கிரஸ் கட்சியை இன்னும் வலுப்படுத்த வேண்டும்.
படத்தை வியாபார நோக்கத்திற்காக கற்பனை கதைகளை புகுத்தி மக்களுக்கு பார்வைக்கு வைக்கின்றனர். இதனை கடந்து செல்ல வேண்டும் ஜனநாயகம் படத்தை வாழ்நாள் முழுவதும் பார்க்க மாட்டேன். மேலும் தேர்தலை முடிவு செய்வது சினிமா படங்கள் கிடையாது.
விஜய்க்கு ஆதரவு இருக்கும் என்பது தெரியும் இதுவே வாக்குகளாக மாறுமா என்ற நிலை கேள்விக்குறிதான் உள்ளது.
தாராபுரத்தை காங்கிரசுக்கு ஒதுக்கினால் நல்ல வேட்பாளரை நிறுத்துவோம். அதிகார இடத்தில் நான் இருந்தால் ஆயிரம் ரூபாய் பணத்தை 2000 ரூபாயாக மாற்றி கொடுப்பேன் இதன் மூலமாக உள்ளுறை சேர்ந்த கிராம மக்கள் பொருளாதார ரீதியாக மேன்மை அடைவார்கள். வரிப்பணமும் அரசாங்கத்திற்கு அதிகமாக கிடைக்கும.
பாரதிய ஜனதா கட்சி விரும்பத் தகாத கட்சி தமிழ்நாட்டு மக்கள் இந்து துவா கொள்கையை ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். தமிழக அரசு சிறப்பாக செயல்பட்டு கொண்டுள்ளது குறிப்பாக அந்நிய முதலீட்டை தமிழ்நாட்டுக்கு கொண்டு வந்து பொருளாதாரத்தை உயர்த்தியுள்ளனர் . ரஷ்யாவில் குரூட் ஆயில் வாங்குவதற்கு டிரம்ப் 500% வரிசை போட்டுள்ளார் மோடி இது சம்பந்தமாக டிரம்பிடம் இதுவரை பேசவில்லை
இதிலிருந்து நாம் எவ்வளவு வீக்காக உள்ளதை தெரிந்து கொள்ளுங்கள். ரஷ்யா அமெரிக்கா வர்த்தகம் செய்வதை நிர்ணயம் செய்கிறது மோடி அரசு வீக்காக உள்ளதாக தெரிவித்தார். இந்நிகழ்ச்சியில் காங்கிரஸ் நகர தலைவர் செந்தில்குமார்,மகிலா காங்கிரஸ் மாநில பொது செயலாளர் மாலதி, மகிலா காங்கிரஸ் மாநில மகளிர் அணி துணைத்தலைவர் காணப்பிரியா மற்றும் இயல் இசை நாடகப்பிரிவு உறுப்பினர் கலாராணி உள்ளிட்ட நூற்றுக்கு மேற்பட்ட காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.