கோவையில் கவுண்டம்பாளையம் பகுதி தி.மு.க.மாணவரணி சார்பாக சமத்துவ பொங்கல் விழா கவுண்டம்பாளையம் பகுதி மாணவரணி அமைப்பாளர் சிவனேசன் தலைமையில் நடைபெற்றது…
இந்நிகழ்ச்சியில்,தி.மு.க.மாநில மாணவரணி செயலாளர் ராஜீவ் காந்தி
தமிழக சிறுபான்மை ஆணைய உறுப்பினர் முகம்மது ரபி, ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டனர்..
நிகழ்ச்சியில், சாய்பாபாகாலனி பகுதி மாணவரணி அமைப்பாளர் கோவை தல்ஹா அனைவரையும் வரவேற்று பேசினார் கரும்பு தோரணங்கள் கட்டி ஜல்லிக்கட்டு காளை,ஆடு,சேவல் என கிராமத்தை கண்முன் நிறுத்தியபடி அடுப்பில் பொங்கல் வைத்தனர்..
விழாவின் ஒரு பகுதியாக நடைபெற்ற உறியடித்தல் போட்டியில் ஆர்வமுடன் கலந்து கொண்ட பலர் கண்களை கட்டி உறியடித்து கவனம் ஈர்த்தனர்..
விழாவில்,மாவட்ட அமைப்பாளர் அந்தோணி,மாநகர் மாவட்ட அமைப்பாளர் சிவப்பிரகாஷ்,மற்றும் நிர்வாகிகள் மசூது,பைந்தமிழ்,ஹைதர் அலி திப்புசுல்தான் பள்ளி வாசல் பொருளாளர் வழக்கறிஞர் இஸ்மாயில் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்…