முதுகுளத்தூர்

இராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூரில் அதிமுக சார்பாக எம்.ஜி.ஆரின் 109வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு முதுகுளத்தூர் பஸ் நிலையம் எதிரில் முதுகுளத்தூர் மத்திய ஒன்றியம் சார்பில் ஒன்றிய செயலாளர்எஸ்.டி செந்தில்குமார் ஆகியோர் தலைமையில் முன்னாள் எம் எல் ஏ. மலேசியா பாண்டியன், மாவட்ட எம்ஜிஆர் மன்ற இணைச் செயலாளர் சுந்தரபாண்டியன், சண்முகபாண்டியன் (கழக விவசாய அணி துணை செயலாளர்) முன்னிலையில் அலங்கரிக்கப்பட்ட எம் ஜி ஆர் படத்திற்கு பூஜை செய்து தேங்காய் உடைத்து வழிபட்டனர். நிகழ்ச்சியில் மேற்கு ஒன்றிய அவைத்தலைவர் எஸ். கதிரேசன், முன்னாள் ஒன்றிய கவுன்சிலர் வெங்களகுறிச்சி ராஜசேகர் |நகர் அவைத்தலைவர் கருப்பசாமி, நகரத் துணைச் செயலாளர் குருசாமி, 11வது வார்டு கிளைச் செயலாளர் செல்லையா, உள்பட அதிமுகவினர் திரளாக கலந்துகொண்டுஅதனைத் தொடர்ந்து கிளைக் கழகச் செயலாளர்கள் பேரூர் கழகம் மற்றும் பொதுமக்கள் அனைவருக்கும் இனிப்புகள் வழங்கினார்

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *