கொல்கத்தா பெண் மருத்துவர் படுகொலை சம்பவத்தை கண்டித்து மருத்துவர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபடுவதாக இந்திய மருத்துவர்கள் சங்கம்,திண்டுக்கல் மாவட்ட மருத்துவர்கள் சங்கம் சார்பில் கருப்பு பேட்ஜ் அணிந்து அமைதிப் பேரணி நடந்தது.இதற்கு தமிழ்நாடு அரசு மருத்துவர்கள் சங்க மாநில பொதுச் செயலாளர் மருத்துவர். சீனிவாசன் தலைமை தாங்கினார்.
திண்டுக்கல் மாவட்ட அரசு மருத்துவர்கள் சங்க செயலாளர் நாகராஜன்,பொருளாளர் திருலோகச்சந்திரன், திண்டுக்கல் இந்திய மருத்துவ சங்க தலைவர் ராஜ்குமார்,செயலாளர் டாக்டர் லலித்குமார், பொருளாளர் டாக்டர் பிரேம்நாத்,திண்டுக்கல் மருத்துவ கல்லூரி மாணவர் சங்கத் தலைவர் வினித்,செயலாளர் நந்தினி,துணை செயலாளர் ராமானுஜம்,பொருளாளர் யோகேஷ் உள்ளிட்டோர் இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர்.