பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழர்களின் வீர விளையாட்டான ஜல்லிக்கட்டு போட்டிகள் நடந்து வருகிறது. மதுரை மாவட்டத்தில் பொங்கல் அன்று அவனியாபுரத்தில் முதல் ஜல்லிக் கட்டுபோட்டி தொடங்கியது. அதனை தொடர்ந்து நேற்று பாலமேட்டில் ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்றது. இதில் வெற்றி பெற்ற வீரர்களுக்கும், களத்தில் நின்று நீண்ட நேரம் விளையாடிய காளையின் உரிமையாளர் களுக்கும் கார், டிராக்டர் பரிசாக வழங்கப்பட்டது.

ஜல்லிக்கட்டுபோட்டியில் அதிக காளைகளைஅடக்கி பரிசு பெறும் சிறந்த வீரர்களுக்கு அரசு வேலை வழங்கவேண்டும் என தொடர்ந்து வலியுறுத்தப்பட்டு வருகிறது.
இந்நிலையில் அலங்கா நல்லூரில் உலக பிரசித்தி பெற்ற ஜல்லிக் கட்டு போட்டி தொடங்கி நடைபெற்றது. இந்த போட்டியை கண்டு களிப்பதற்காக முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னையில் இருந்து மதுரைக்கு வந்தார். அவரை அமைச்சர் மூர்ததி கலெக்டர் பிரவீன்குமார் ஆகியோர் வரவேற்றனர்.

தொடர்ந்து அலங்காநல்லூர் வாடிவாசல் அருகில் அமைக்கப்பட்டிருந்த + விழா மேடைக்கு வருகை தந்த முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆர்வத்துடன் போட்டியை ஆர்வத்துடன் கண்டு, களித்தார். அப்போது வெற்றி பெற்ற வீரர்களுக்கும், காளையின் உரிமையாள ருக்கும் தங்க மோதிரம் பரிசாக வழங்கி அவர் பேசியதாவது:-
பொங்கல் வாழ்த்துக்களையும், புத்தாண்டு வாழ்த் உங்கள் அனைவருக்கும் எனது அன்பான வணக்கம். அதே நேரத்தில் அனைவருக்கும் என்னுடைய கருத்துக்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

இந்த மதுரை மண் என்பது வீரம் விளைந்த மண்ணாகவும், அப்படிப் பட்டி வீரம் விளைந்த இந்த மண்ணில் வீர விளையாட் டான உலக புகழ் பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டை பார்க்கின்ற போது நமக்கு எல்லாம் வீரமே வருகிறது. அதனை பெருமை அடக்குகிற காளையர்களை பார்க்கும்போது நம்முடைய தமிழ் மண்ணுக்கு பெருமை யாக இருக்கிறது. நம்முடைய யாக திராவிட மாடல் ஆட்சியில் இந்த வீரம் விளைந்த மண்ணில் அறிவு வளர்ச்சிக் காக கலைஞர் நூற்றாண்டு நூலகம் கட்டிக் கொடுக் கப்பட்டு உள்ளது உங்களுக்கு எல்லாம் தெரியும்.

அதேபோல தமிழர்களின் அடையாளமாக இந்த வீர விளையாட்டுக்கு கலைஞர் நூற்றாண்டு ஏறுதழுவுதல் அரங்கமும் கட்டிக் கொடுக்கப் பட்டுள்ளது. இது அரசின் மிகப்பெரிய சாதனை.

ஆகவே இதை சொல்லுகின்ற நேரத்தில் இப்பொழுது நடைபெற்றுக் கொண்டு இருக்கும் ஜல்லிக்கட்டை பார்க்க முதல்-அமைச்சராக வந்திருக்கக் கூடிய நான் ஏதாவது அறிவிப்புகளை வெளியிட்டு போனால்தான் உங்களுக்கு மகிழ்ச்சி. எனவே மகிழ்ச்சியோடு அறிவிக்க விரும்புகிறேன்.

பாரம்பரியமிக்க ஜல்லிக்கட்டு போட்டியில் பங்பெற்று அதிக காளைகளை அடக்கி சிறந்து விளங்கக்கூடிய வீரர்களுக்கு முன்னுரிமை அடிப்படையில் கால்நடை பராமரிப்பு துறையில் உரிய அரசு பணியிடங்களுக்கு பணி அமர்த்தி வழிவகை செய்யப்படும் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.

உலக புகழ் பெற்ற தமிழ்நாட்டில் அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டு காளைகளுக்கான சிறந்த உயர்தர சிகிச்சை மற்றும் பயிற்சி மையம் ரூ.2 கோடி செலவில் அமைக்கப்படும் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கி றேன். இந்த இரண்டு அறி விப்பும் உங்களுக்கு மகிழ்ச்சி தரும். அந்த மகிழ்ச்சியோடு “தமிழர்கள் எல்லோரும் வெல்வோம் ஒன்றாக” என்று கூறினார்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *