விழுப்புரம் மாவட்டம் கண்டமங்கலம் ஒன்றியம் நவமால் காப்பேர் கிராமத்தில் சமத்துவ திராவிட பொங்கல் மற்றும் கிராமிய கலைத் திருவிழா நிகழ்ச்சி நடைபெற்றது.

நவமால் காப்பேர் ஊராட்சி மன்ற தலைவர் மணிமேகலை சின்னத்தம்பி வரவேற்றார். கண்டமங்கலம் ஒன்றிய சேர்மன் ஆர். எஸ். வாசன் தலைமை தாங்கினார்.
சிறப்பு விருந்தினராக விழுப்புரம் திமுக மத்திய மாவட்ட பொறுப்பாளர் எம் எல் ஏ லட்சுமணன் கலந்துகொண்டு பொங்கல் வைக்கும் நிகழ்ச்சியை துவக்கி வைத்து 850 குடும்ப மகளிர்களுக்கு பொங்கல் பரிசு மற்றும் புடவைகளை வழங்கினார்.

நிகழ்ச்சியில் முன்னாள் எம்.எல்.ஏ மாரிமுத்து , ஆதிதிராவிடர் நலக்குழு இணைச் செயலாளர், முன்னாள் எம்எல்ஏ புஷ்பராஜ், மாவட்ட பொறுப்புக் குழு உறுப்பினர் கண்ணப்பன் , ஒன்றிய செயலாளர்கள் கணேசன் , செல்வமணி, சீனு செல்வரங்கம் , பிரபாகரன் மாவட்ட சுற்றுசூழல் அணி துணை அமைப்பாளர் வெ. சம்பத் ஆகியோர் முன்னிலை வகித்தனர். விழாவில் உரியடி , கிராமிய கலைகள்,பரதநாட்டியம் ,சிலம்பாட்டம், கரகாட்டம், பொய்க்கால்குதிரை ஆட்டம், கோலாட்டம்,கிராமிய தப்பாட்டம்,போன்ற கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றது.


நிகழ்ச்சியில் திமுக அனைத்து நிலை நிர்வாகிகள் பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர். நிகழ்ச்சிக்கான ஏற்பாட்டினை ஊராட்சி மன்ற தலைவர் மணிமேகலை சின்னத்தம்பி மற்றும் ஒன்றிய பொறுப்புக் குழு உறுப்பினர் சின்னத்தம்பி , ஆகியோர் செய்திருந்தனர்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *