மன்னார்குடி ராஜகோபாலசுவாமி கோயில் வளாகத்தில் பெண்கள் காணும் பொங்கல் பண்டிகையை கொண்டாடி வெற்றி பெற்றவர்களுக்கு தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா பரிசுகளை வழங்கினார் .
திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி ராஜகோபாலசுவாமி கோவில் வளாகத்தில் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பெண்கள் ஒரே இடத்தில் கூடி காணும் பொங்கல் பண்டிகையை கொண்டாடி மகிழ்ந்தனர்.
இக்கோவிலின் தேரோடும் உள்பிரகாரத்தில் நடைபெற்ற காணும் பொங்கல் விழா கொண்டாட்டத்தில் பெண்கள் மட்டுமே கலந்து கொள்ளும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
இந்த வளாகத்தில் குடும்பத்தினருடன் வரும் ஆண்களை தவிர மற்ற ஆண்களுக்கு அனுமதி கிடையாது என்பதால் பெண்கள் கபடி, ஓட்டப்பந்தயம் , இசை நாற்காலி , பானை உடைத்தல் , கயிறு இழுத்தல் உள்ளிட்ட பல்வேறு விளையாட்டுப் போட்டிகளையும் நடத்தி மகிழ்ந்தனர்.
இப்போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா பரிசுகளை வழங்கினார் கோவில் அறங்காவலர் குழு தலைவர் கருடா இளவரசன் நிர்வாக அலுவலர் மாதவன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.