சத்துணவு மையங்களில் காலிப் பணியிடங்களை உடனடியாக நிரப்பக் கோரி ராஜபாளையத்தில் சத்துணவு ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்!
விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு விருதுநகர் மாவட்ட தலைவர் தமிழ்ச்செல்வி தலைமையில், முத்து வெள்ளையப்பன் கோரிக்கை விளக்க உரையாற்றினார்.
அனைத்து ஓய்வூதியர் சங்கம் சார்பில் ராஜ்குமார், மாவட்ட செயலாளர் முருகன், செந்தில் வேல், நெடுஞ்சாலைத்துறை கோபால் உட்பட பலர் கோரிக்கைகளை விளக்கி பேசினார்கள். சத்துணவு மையங்களில் உள்ள காலி பணியிடங்களை உடனடியாக நிரப்பவும், சத்துணவு ஊழியர்கள் பணி ஓய்வு பெறுகின்ற காலங்களில் ஒட்டுமொத்த தொகையாக ரூ.5- லட்சம் வழங்கவும், 10 முதல் 30 வருடம் முடிந்த சத்துணவு ஊழியர்களுக்கு ஊக்க ஊதிய உயர்வு வழங்க கோரி உள்பட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. முடிவில் எஸ்.
அஞ்சலி நன்றி கூறினார்.