தென்காசி மாவட்டம் ஆலங்குளம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட கீழவீராணம் ஊராட்சியில் ரூபாய் 33.60 / – ரூபாய் இலட்சம் மதிப்பீட்டில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள வீட்டு குடிநீர் இணைப்புகளை பொதுமக்களுக்கு பயன்படுத்து வதற்கான துவக்க விழா கீழ வீராணம் ஊராட்சி மன்ற தலைவர் வீரபாண்டியன் தலைமையில் நடைபெற்றது
ஊராட்சி மன்ற துணை தலைவர் ஜமீலா பீவி காஜா மைதீன் ஜமாத் தலைவர்கள் மியா கண்ணு , சிந்தா மாதர் ஆகியோர் முன்னிலை வகித்தார்.
ஆலங்குளம் ஊராட்சி ஒன்றிய சேர்மன் எம் திவ்யா மணிகண்டன் சிறப்பாக கலந்து கொண்டுபுதிதாக அமைக்கப்பட்டுள்ள வீட்டு குடிநீர் இணைப்புகளை
பொதுமக்கள் பயன்பாட்டிற்கு துவக்கி வைத்தார்
இந்நிகழ்ச்சியில் வீராணம் கிளை கழக செயலாளர் பாலசுப்பிரமணியன், மாவட்ட ஒட்டுநர் அணி அமைப்பாளர் அமானுல்லா,பஞ்சாயத்து வார்டு உறுப்பினர்கள் அனிபா, ஊராட்சி செயலாளர் பாண்டியராஜா உட்பட ஊர் பெரியோர்கள் கலந்து கொண்டனர்