மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் அருகே உள்ள வாவிடமருதூர் ஊராட்சியில் புதிய ஆதிதிராவிடர் காலணியில் மக்கள் வசித்து வருகின்றனர்
இவர்கள் தினமும் கூலி வேலைக்கு சென்று மாலையில் தான் தங்கள் வசிக்கும் பகுதிக்கு வருகின்றனர் இப்பகுதியில் போதிய மின்சார வசதி இல்லாததால் பள்ளி கல்லூரியில் படிக்கும் மாணவ மாணவிகள் இரவு நேரங்களில் படிக்க முடியாமல் தவித்து வந்தனர்
தங்களின் பிள்ளைகளின் நிலையை அறிந்த பெற்றோர்கள் ஊராட்சி மன்ற தலைவர் திருநாவுக்கரசு அவர்களிடம் தங்கள் பகுதிக்கு ட்ரான்ஸ்பார்ம் அமைத்து சரியான முறையில் மின்சார வசதி பெற்று தர வேண்டும் என்று கோரிக்கை மனு வழங்கினர்.
இதனைத் தொடர்ந்து ஊராட்சி மன்ற தலைவர் திருநாவுக்கரசு, மின்வாரிய அதிகாரிகளை நேரில் சந்தித்து தங்களது ஊரில் உள்ள காலனி பகுதிக்கு மினி டிரான்ஸ்பார்ம் அமைத்து பொதுமக்களுக்கு உதவி செய்ய வேண்டும் என்று தெரிவித்து கோரிக்கை மனுவினை உதவி மின் பொறியாளர் செந்தில்குமாரிடம், வழங்கினார்.. மனுவினை பெற்றுக் கொண்ட அவர் நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தனர்.
அதனை தொடர்ந்து இடத்தினை தேர்வு செய்து மினி டிரான்ஸ்பார்ம் அமைத்தனர். அதற்கான திறப்பு விழா நேற்று முன்தினம் 29.08.24. வியாழக்கிழமை நடைபெற்றது. ஊராட்சி மன்ற தலைவர் மற்றும் கிராம பொதுமக்கள் முன்னிலையில் மின்வாரிய ஊழியர்கள் டிரான்ஸ்பார்மர் இயக்கி கிராமத்துக்கு மின்சாரத்தை வழங்கினர். தங்களது பகுதிக்கு நீண்ட நாள் கோரிக்கையான ஏற்று மின்சார வசதி செய்து கொடுத்த ஊராட்சி மன்ற தலைவர் மற்றும் மின்வாரியத்துறை அதிகாரிக்கு பொதுமக்கள் நன்றி தெரிவித்தனர்.