மாணவ,மாணவிகளின் இலக்கிய திறன்களை ஊக்குவிக்கும் விதமாக தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம் சார்பாக கோவையில் கவிதை,பேச்சு,ஓவியம் உள்ளிட்ட போட்டிகள் நடைபெற்றது..
தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம் இந்துஸ்தான் கலை அறிவியல் கல்லூரி தமிழ் துறையும் இணைந்து கல்லூரி மாணவர்களுக்கான இலக்கியப் போட்டிகளை நடத்தினர்…
கவிதை ,ஓவியம், பேச்சு உள்ளிட்ட போட்டிகளும், மாணவர்கள் தங்களது தனித்திறன்களை வெளிப்படுத்தும் விதமாக ஒராள் நாடகமும் நடைபெற்றது…
கவிதை போட்டியில் மெல்லத்தமிழ் இனி?,
இன்ஸ்டா அடிமைகள்,
இயற்கை பேரிடர்கள் படிப்பினை என்ன ?,
சமத்துவமும் சமூக நீதியும் போன்ற தலைப்புகளும், பழங்குடி மனித குலத்தின் மூத்த குடி,நம் கல்வி நம் உரிமை எல்லோரும் சமம்தானே டீச்சர. போன்ற தலைப்புகளில் பேச்சு போட்டியும்,
நடைபெற்றன..
இளம் தலைமுறை மாணவர்களின் இலக்கிய திறன்களை ஊக்குவிக்கும் விதமாக நடைபெற்ற இந்த
போட்டிகளை தமிழ்நாடு சிறுபான்மை ஆணைய உறுப்பினர் முகம்மது ரஃபி துவக்கி வைத்தார்..
தனி தனி அரங்குகளில் நடைபெற்ற போட்டிகளில் பல்வேறு கல்லூரிகளில் இருந்து மாணவ,மாணவிகள் ஆர்வமுடன் கலந்து கொண்டனர்..
குறிப்பாக ஒராள் நாடகத்தில் தனியாக மேடைக்கு வந்த மாணவ,மாணவிகள் போதை பொருட்களால் ஏற்படும் தீமைகளையும்,சாலை பாதுகாப்பு குறித்த விழப்புணர்வுகளையும் தத்ரூப நாடகங்களாக தனியே நடித்து அசத்தினர்..