கள்ளக்குறிச்சி மாவட்டம் கல்வராயன்மலை கிராம மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த மதுவிலக்கு விழிப்புணர்வு மற்றும் அரசின் நலத்திட்டங்கள் பற்றிய விளக்கக் கூட்டம் நடத்திய வடக்கு மண்டல காவல்துறைத் தலைவர்
தமிழக காவல்துறையின் வடக்கு மண்டல காவல்துறைத் தலைவர் அஸ்ரா கர்க், இ.கா.ப., அவர்கள் தலைமையில் கள்ளக்குறிச்சி மாவட்டம், கல்வராயன்மலை பகுதியில் கடந்த காலங்களில் கள்ளச்சாராயம் தொடர்பாக அதிக குற்றவழக்குகள் பதிவு செய்யப்பட்ட சுமார் 50-க்கும் மேற்பட்ட கிராமங்களை கண்டறிந்து வருவாய் துறையினருடன் இணைந்து அந்த கிராம மக்களுக்கு வாழ்வாதாரத்தை மேம்படுத்த மதுவிலக்கு விழிப்புணர்வு மற்றும் அரசின் நலத்திட்டங்கள் பற்றிய விளக்கக் கூட்டம் நடைப்பெற்றது.
இக்கூட்டத்தில் வடக்கு மண்டல காவல்துறைத் தலைவர் அவர்கள் கல்வராயன் மலைவாழ் கிராம மக்களுக்கு மதுவிலக்கு பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்தியதுடன் அவர்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்த அரசால் வழங்கப்படும் நலதிட்டங்கள் மற்றும் மதுவிலக்கு குற்ற சம்பவங்களில் ஈடுபட்டு மனம்திருந்தி வாழும் பொதுமக்களின் வாழ்க்கைத்தரம் மேம்பட அரசால் வழங்கப்படும் மறுவாழ்வுநிதி குறித்து எடுத்துரைத்தார். மேலும் மலைவாழ் மக்களுக்கு தேவைப்படும் அடிப்படை தேவைகளை வருவாய் துறையினருடன், காவல்துறையும் இணைந்து நிவர்த்தி செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் கூறினார்.
இக்கூட்டத்தில் விழுப்புரம் சரக காவல்துறை துணைத் தலைவர் திஷா மித்தல், இ.கா.ப., அவர்கள், கள்ளக்குறிச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ரஜத் சதுர்வேதி, இ.கா.ப., அவர்கள், கள்ளக்குறிச்சி உட்கோட்ட துணை காவல் கண்காணிப்பாளர், வருவாய் துறையினர் மற்றும் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.