கம்பம் ராம் ஜெயம் வித்யா மந்திர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில், தாய்நாடு இந்தியா பற்றி ஆகஸ்ட் மாதம் முழுவதும் கொண்டாடப்பட்டது.
இதன் நிறைவு விழா வெகு விமர்ச்சியாக கொண்டாடப்பட்டது. இதில் சிறப்பு விருந்தினராக உத்தமபாளையம் வருவாய் கோட்டாட்சியர் மற்றும் உட்கோட்ட நடுவர் செ.தாட்சாயணி சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டார்.
மாணவர்களுக்கு தாய்நாடு இந்தியா குறித்து கருத்துக்களை மாணவர்கள் மத்தியில் எடுத்துரைத்தார், பின்பு மாணவர்களின் கேள்விகளுக்கு பதில்அளித்தார். தாய்நாடு இந்தியா குறித்த போட்டிகளில் கலந்து கொண்ட மாணவர்களுக்கு பரிசளித்து பாராட்டினார்.
சிறு வயது பிள்ளைகளிடம் நம் இந்திய தேசப்பற்றினை தெரிவித்து ஒவ்வொருவரும் நம் தேசத்தின் மீதும் நம் கடமைகளினை பற்றியும் தெரிவித்தார் . பள்ளி மாணவ மாணவிகளுக்கு இது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு, சிறு குழந்தைகளை பள்ளி வளாகத்தில் 10 அடி நீளமுள்ள இந்தியா வரைபடம் வரையப்பட்டு அதில் மாநிலங்கள் மற்றும் முக்கிய நதிகள் காடுகள் குறிக்கப்பட்டு அதன் விளக்கம் கொடுக்கப்பட்டது. மேலும் இதில் மாணவர்கள் ஜாலியன் வாலாபாக் நிகழ்வு மற்றும் நம் தேசத்திற்காக பாடுபட்ட விடுதலை போராட்ட தியாகிகள் வேடமிட்டு நிகழ்ச்சிகள் காட்சிப்படுத்தப்பட்டனர், மாணவர்களின் இத்தகைய செயலினை கண்கொண்டு சிறப்பு விருந்தினர் மனதார பாராட்டினார். இந்த விழா வெகு சிறப்பாக நடைபெற்றது. இதில் பள்ளி நிர்வாக இயக்குனர் கே ஆர் சௌந்தரராஜன் மற்றும் கே ஆர் எஸ்.ராம் ஜெயந்த் ஐ டி ஏஎஸ் ஜாயிண்ட் கமிஷனர் பள்ளி தாளாளர் கவிதா சௌந்தர்ராஜன் தலைமை வகித்து பள்ளி முதுநிலை முதல்வர் R.சுவாதிகா. இளநிலை முதல்வர் எஸ் கயல்விழி ஆகியோர் முன்னிலையில் இந்த நிகழ்ச்சி வெகு சிறப்பாக நடைபெற்றது.