தாளநத்தம் அரசு பள்ளியில் மேலாண்மை குழு மறுகட்டமைப்பு கூட்டம், மற்றும் புதிய நிர்வாகிகள் தேர்வு நடைபெற்றது.
கடத்தூர் அடுத்த தாளநத்தம் நடு நிலைப்பள்ளியில் பள்ளி மேலாண்மை குழு மறு கட்டமைப்பு கூட்டம் நடைபெற்றது.
கூட்டத்திற்கு பள்ளி தலைமை ஆசிரியர் அசோகன் தலைமை தாங்கினார். புட்டிரெட்டிபட்டி தலைமையாசிர் புவனேஸ்வரி. கல்வி அலுவக சார்பாக மேற்பார்வையாளராக பங்கேற்றார். பட்டதாரி ஆசிரியர் மனோகரன் வரவேற்றார் .
கூட்டத்தில் பள்ளி மேலாண்மை குழு தலைவியாக இம்பிரியா ஜகன்,துணைத் தலைவராக சுமத்திராவேலுசாமி, அவர்களும் பள்ளி மேளாண்மை குழு உறுப்பினர்களாக 14.. பள்ளி ஆசிரியர் 2, முன்னாள் மாணவர்கள் சார்பாக 4 பேர் , மகளிர் குழு. இல்லம் தேடி கல்வி பணியாளர் உள்ளிட்ட 24பேர் தேர்வு செய்யப்பட்டனர். அவர்களுக்கு சான்றிதழ் வழங்கப்பட்டது
ஆசிரியர் ராமச்சந்திரன் உறுதி மொழி கூற. பள்ளி வளர்ச்சி, மாணவர்களின் கற்றல் திறன் மேம்பாடு அடைய, மாணவர் சேர்க்கை அதிகரிக்க பள்ளி வளர்ச்சிக்காக முழுமையாக பாடுபடுவோம் அனைவரும் உறுதிமொழி எடுத்துக் கொண்டனர். கூட்டத்தில் ஏறாலமான பெற்றோர்கள் கலந்து கொண்டனர்