எ. கா. த. தர்மராஜா பெண்கள் கல்லூரியில் பேராசிரியர் மேம்பாட்டு பயிற்சி
ராஜபாளையம்
எ. கா. த. தர்மராஜா பெண்கள் கல்லூரியில் பேராசிரியர் மேம்பாட்டு பயிற்சி கருத்தரங்கில் 50- க்கும் மேற்பட்ட பேராசிரியர்கள் கலந்து கொண்டனர். சிறப்பு விருந்தினராக சிவகாசி பி.எஸ்.ஆர் அறிவியல் மற்றும் கலை கல்லூரியின் நிர்வாக மேலாண்மை துறைத்தலைவர் கண்ணன் பால்ராஜ் அவர்களும், இராஜபாளையம் இராஜூக்கள் கல்லூரியின் நிர்வாக மேலாண்மை துறைத்தலைவர் கண்ணன் அவர்களும், வருகை புரிந்தனர். பேராசிரியர் கண்ணன் பால்ராஜ் அவர்கள் ஆய்வு கட்டுரைகளை எழுதி எப்படி சமர்ப்பிப்பது என்பதை பற்றி கூறினார் .கல்லூரியின் கல்வி ஆலோசகர் திரு. சங்கரநாராயணன் அவர்கள் புத்தகம் எப்படி எழுதுவது என்பதையும் அதை வெளியிடும் முறையைப் பற்றியும் பேராசிரியர்களுக்கு விளக்கம் கொடுத்தார்.
ராஜபாளையம் ராஜூக்கள் கல்லூரி நிர்வாக மேலாண்மை துறைத்தலைவர் கண்ணன் அவர்கள் நூலகம் சென்று நிறைய புத்தகம் படிப்பதால் மனநிலை அமைதியாக இருக்கும் என்று பேசினார். கல்லூரி முதல்வர் முனைவர் ஜமுனா அவர்கள் வரவேற்புரையாற்றினார்.ஒருங்கிணைப்பாளர் திருமதி .கிருஷ்ணகுமாரி நன்றியுரை கூறினார் .