தேனி மாவட்டம் கம்பம் கலைவாணர் என் எஸ் கிருஷ்ணன் மன்றத்தில் சார்பில் சமத்துவ பொங்கல் விழா கம்பம் தேனி சாலையில் அமைந்துள்ள ஜே.எஸ்.டி மஹால் வளாகத்தில் கோலாகலமாக நடைபெற்றது

இந்த விழாவிற்கு நகராட்சி நகர் மன்ற தலைவர் வனிதா நெப்போலியன் தலைமை வகித்து பொங்கல் அடுப்பை பற்ற வைத்து பொங்கல் வைப்பதை தொடங்கி வைத்தார் இதனைத் தொடர்ந்து கோலப் போட்டிகள் உறியடி மியூசிக் சேர் கயிறு இழுக்கும் போட்டி இசை நிகழ்ச்சி போன்ற நிகழ்ச்சிகள் வெகு சிறப்பாக பார்வையாளர்களை கவரும் விதமாக நடைபெற்றது

கம்பம் கலைவாணர் என் எஸ் கிருஷ்ணன் மன்றத்தின் தலைவர் ஜே.எஸ். டி அன்பழகன் செயலாளர் பரமன் பொருளாளர் பெருமாள் ஆகியோர் போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளை வழங்கி ஊக்கப்படுத்தினார்கள் நிகழ்ச்சியில் வழக்கறிஞர் துரை நெப்போலியன் துணிந்து நில் அறக்கட்டளை நிறுவனத் தலைவர் மனித நேயர் பண்பாளர் எம் வேல் பாண்டியன் ஆசிரியர் சிவாஜி உள்பட கலைவாணர் மன்ற நிர்வாகிகள் பொது மக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *