எஸ் செல்வகுமார் செய்தியாளர் சீர்காழி
சீர்காழி பகுதியில் விநாயகர் சதுர்த்தி ஊர்வலம் வரும்
8, ஆம் தேதி நடப்பதை முன்னிட்டு விழா குழுவினர் பின்பற்ற வேண்டிய நடைமுறைகள் குறித்து ஆலோசனை கூட்டம்
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி காவல் நிலையத்தில் விநாயகர் சதுர்த்தி ஊர்வலம் குறித்து ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
விழா குழு ஒருங்கிணைப்பாளர்கள் கலந்து கொண்ட ஆலோசனை கூட்டத்தில் காவல்துறை சார்பாக தெரிவிக்கப்பட்ட முக்கிய விதிமுறைகளான விநாயகர் சிலைகள் தூய களிமண்ணால் தயார் செய்தவை மட்டுமே பயன்படுத்த வேண்டும். பிளாஸ்டர் ஆஃப் பாரிஸ் போன்ற மாசுபடுத்தும் பொருட்களால் செய்யப்பட்டதாகவோ மாசுபடுத்தும் ரசாயனங்களால் வர்ணம் பூசப்பட்டதாக இருக்கக் கூடாது.
நீரில் கரையக்கூடிய மற்றும் நச்சுத் தன்மையற்ற இயற்கை சாயங்களை மட்டுமே பயன்படுத்த வேண்டும். பிற மத ஸ்தலங்கள், மருத்துவமனை மற்றும் கல்வி நிலையங்களுக்கு அருகில் சிலைகளை நிறுவுதல் தவிர்க்கப்பட வேண்டும்.
மதவெறியை தூண்டும் வகையிலும் பிற மதத்தினரின் உணர்வுகளை பாதிக்கும் வகையிலும் முழக்கங்களை எழுப்புதல் கூடாது. அதேபோல் விநாயகர் சிலைகளை வைக்கும் இடங்களிலோ ஊர்வல பாதைகளிலோ மற்றும் சிலைகளை கரைக்கும் இடங்களிலோ பட்டாசுகளை வெடிக்க அனுமதி கிடையாது..
விநாயகர் ஊர்வலத்தின் போது 18 வயதிற்கு கீழ் உள்ள சிறார்களை அழைத்துச் செல்லக்கூடாது. விநாயகர் சிலைகளை அந்தந்த விழா கமிட்டி பொறுப்பாளர்கள் சுழற்சி முறையில் தன்னார்வலர்களை நியமித்து பாதுகாப்பு செய்து கொள்ள வேண்டும் உள்ளிட்ட நடைமுறைகளை பின்பற்ற வேண்டும். நடைமுறைகளை மீறும் பட்சத்தில் சட்ட ரீதியான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என சீர்காழி காவல் ஆய்வாளர் அறிவுறுத்தினார்.இந்த ஆலோசனைக் கூட்டத்தில் ஏராளமான இந்து அமைப்பு நான் கலந்து கொண்டனர்.