அலங்காநல்லூர்
மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் தெப்பக்குளம் சமுதாயக் கூடத்தில் பேரூர் அதிமுக சார்பில் புதிய உறுப்பினர் அடையாள அட்டை வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு ஒன்றிய கழகச் செயலாளர் கல்லணை ரவிச்சந்திரன், தலைமை தாங்கினார்
நகரச் செயலாளர் அழகுராஜ், முன்னிலை வகித்தார் சிறப்பு விருந்தினர் சட்டமன்ற எதிர்க்கட்சித் துணைத் தலைவரும் முன்னாள் முப்பெரும் துறை அமைச்சருமான ஆர்.பி.உதயகுமார், கலந்துகொண்டு புதிய உறுப்பினர் அடையாள அட்டையினை நிர்வாகிகளுக்கு வழங்கினார்.