விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அண்ணா நகரை சேர்ந்தவர் கோவிந்தராஜ் வயது 40. இவர் ஆட்டோ டிரைவர். இவர் தனது ஆட்டோவில் தனது குடும்பத்தை சேர்ந்த பழனியம்மாள்( 52,) கோகிலா (40,) பரமாத்மா( 60, முத்துப்பாண்டியன் (37, )ஆகியோருடன் சங்கரன்கோவில் சென்றுவிட்டு இரவு திரும்பி ஸ்ரீவில்லிபுத்தூருக்கு செல்லும் வழியில் முதுகுடி விலக்கு அருகே எதிரே வந்த கார் இவர்களது ஆட்டோ மீது மோதியது.
இதில் ஆட்டோ அப்ளமாக நொறுங்கியது மோதிய காரும் சாலையின் ஓரத்தில் கவிழ்ந்தது இதில் ஆட்டோ ஓட்டிவந்த கோவிந்தராஜ் சம்பவ இடத்திலேயே பலியானார். அந்த வழியாக வந்த சிலர் ஆட்டோவில் பயணம் செய்த படுகாயமடைந்த நிலையில் இருந்த இரண்டு பெண்கள் உள்பட நான்கு பேரை மீட்டு ராஜபாளையம் அரசு மருத்துவ மனைக்கு அனுப்பிவைத்தனர்
தகவல் அறிந்த ராஜபாளையம் தெற்கு காவல் நிலைய
ஆய்வாளர். செல்வி போலிசாருடன் சென்று விசாரணை மேற்கொண்டு இதுகுறித்து வழக்கு பதிவு செய்து சங்கரன் கோவிலைச் சேர்ந்த கார் டிரைவர் பார்வதி நாதன் என்பவரை கைது செய்தனர்