கும்பகோணம் செய்தியாளர்
ஆர். தீனதயாளன்
கும்பகோணத்தில் ஹோமியோபதி சிறப்பு மருத்துவ பயிற்சி பயிலரங்கம்…
தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தில் உள்ள தனியார் ஹோட்டலில் சிறப்பு ஹோமியோபதி மருத்துவ பயிலரங்கம் கும்பகோணம் ஹோமியோபதி மருத்துவர் சரவணன் தலைமையில் நடைபெற்றது.
நிகழ்ச்சியில் மருத்துவர் வெற்றி செல்வம் வரவேற்புரை ஆற்றினார்.இந்தப் பயிலரங்கத்தில் சென்னை மருத்துவர் டாக்டர் சீனிவாசன் கலந்துகொண்டு சிறப்புரையாற்றி மருத்துவர்களுக்கு சிறப்பு பயிற்சி அளித்தார்.
இதில் நெர் ரெப்பரட்டரி மற்றும் ஹென்ரிக் கைடிங் சிஸ்டம்ஸ் நூல்களை பயன்படுத்தி நோயாளிகளை குணப்படுத்துவது குறித்து மருத்துவர்களுக்கு விளக்கி சிறப்புரையாற்றினார்.
நிகழ்ச்சி மருத்துவர்கள் வெங்கடேசன் , வெற்றிச்செல்வன், ஃபெலிக்ஸ்,பாவலன், மற்றும் கர்நாடகா மேற்கு வங்கம் போன்ற இந்தியாவிலிருந்து இதர மாநிலங்களிலிருந்து 60க்கும் மேற்பட்ட மருத்துவர்கள் கலந்து கொண்டு கருத்து பரிமாற்றம் நடைபெற்று மிகவும் பயனுள்ளதாக இருந்தது.
நிகழ்ச்சியின் ஏற்பாடுகளை ஹோமியோபதி ஏதனியம் அமைப்பினரும் ஹோமியோபதி மருத்துவர்கள் செய்திருந்தனர்.
முடிவில் மருத்துவர் வெங்கடேசன் நன்றி கூறினார்.