கும்பகோணம் செய்தியாளர்
ஆர். தீனதயாளன்
கும்பகோணம் அருகே மாநில அரசுகளின் தேவைகளை உணர்ந்து தேசிய கல்விக் கொள்கை திட்டத்தை செயல்படுத்த வேண்டும் தேசிய கல்விக் கொள்கையை ஏற்காத காரணத்தினால் மத்திய அரசு தமிழகத்திற்கு போதுமான நிதி ஒதுக்கவில்லை எனவும் போக்குவரத்து துறை அமைச்சர் எஸ் எஸ் சிவசங்கர் பேட்டி.

தமிழ்நாடு பூப்பந்தாட்ட கழகம் தஞ்சாவூர் மாவட்ட பூப்பந்தாட்ட கழகம் மற்றும் தஞ்சை வடக்கு மாவட்ட திமுக விளையாட்டு மேம்பாட்டு அணி சார்பில் 43வது சப்ஜூனியர் மாவட்டங்களுக்கு இடையேயான 15வயதுக்குட்பட்ட மாநில பூப்பந்தாட்ட பட்டய போட்டிகள் தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகே திருவிடைமருதூர் திருவாவடுதுறை ஆதீன மேல்நிலைப்பள்ளியில் நேற்று தொடங்கியது.
தமிழகத்தின் பல்வேறு மாவட்டகளைச்சேர்ந்த 53 அணிகள் பங்கேற்று நடந்த போட்டியில் பெண்கள் பிரிவில் மதுரை மாவட்டம் முதலிடத்தையும் சேலம் மாவட்டம் இரண்டாம் இடத்தையும் பெற்றது. ஆண்கள் பிரிவில் திருச்சி மாவட்டம் முதல் இடத்தையும் விருதுநகர் மாவட்டம் இரண்டாம் இடத்தையும் பெற்றது.
வெற்றிபெற்ற அணிகளுக்கு சாம்பியன் டிராபி மற்றும் நினைவு பரிசுகள் வழங்கப்பட்டது. விழாவில் தமிழக போக்குவரத்துத்துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர், மாநிலங்களவை எம்.பி கல்யாணசுந்தரம், தமிழக அரசு தலைமை கொறடா கோவி செழியன், மயிலாடுதுறை பாராளுமன்ற தொகுதி எம்பி சுதா, கும்பகோணம் எம்.எல்.ஏ அன்பழகன், முன்னாள் எம்பி ராமலிங்கம், மாநில பூப்பந்தாட்ட கழக செயலாளர் முத்து செல்வம், துணை தலைவர் சிவகுமார், திருவாடுதுறை ஆதினம் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் ஞானமூர்த்தி உடற்கல்வி ஆசிரியர்கள், கிருஷ்ணகுமார், சண்முகம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டுள்ளனர்.
தொடர்ந்து போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் செய்தியாளர்களிடம் கூறுகையில் தேசிய கல்விக் கொள்கை திட்டத்தை தமிழக அரசு ஏற்றுக்கொள்ளாததால் நமது மாநிலத்திற்கு தேவையான நிதிகளை ஒன்றிய அரசு ஒதுக்கவில்லை தமிழக முதல்வர் இதற்கு தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்
மேலும் தேசிய கல்விக் கொள்கை திட்டத்தை தமிழகத்தில் செயல்படுத்தக்கூடாது என தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி உள்ளிட்ட அமைச்சர் பெருமக்கள் எம்பிக்கள் ஒன்றிய அமைச்சர்களை சந்தித்து கோரிக்கையும் வைத்துள்ளனர்
எனவும் மாநில அரசுகளின் தேவைகளை உணர்ந்து அதனை பூர்த்தி செய்யும் வகையில் ஒன்றிய அரசு செயல்பட வேண்டும் எனவும் மாநில அரசுக்கு தேவையான நிதிகளை ஒன்றிய அரசு ஒதுக்கி தர வேண்டும் எனவும் கூறினார்.