எதிர்வரும் உள்ளாட்சி தேர்தல் மற்றும் சட்டமன்ற தேர்தலை எதிர்கொள்ளும் வகையிலும் கட்சியை பலப்படுத்தும் வகையில் அதிமுக சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன
அதன் ஒரு பகுதியாக பெரம்பலூர் மாவட்டத்தில் அதிமுக உறுப்பினர்களுக்கு உறுப்பினர் அட்டை வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது.பெரம்பலூரை அடுத்த குரும்பலூர் பேரூர் கழக அதிமுக சார்பில் உறுப்பினர்களுக்கு உறுப்பினர் அட்டை வழங்கும் நிகழ்ச்சி பேரூர் கழக செயலாளர் செந்தில்குமார் தலைமையில் நடைபெற்றது
இதில் பெரம்பலூர் அதிமுக மாவட்ட கழக செயலாளர் தமிழ்ச்செல்வன் கலந்து கொண்டு உறுப்பினர்களுக்கு உறுப்பினர் அட்டைகளை வழங்கினார்
இதில் அதிமுக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.