கம்பம் புனித ஆரோக்கிய மாதா தேவாலயத்தில் கொடியேற்றம் தேனி மாவட்டம் கம்பம் புனித ஆரோக்கிய அன்னை தேவாலயத்தில் பங்குத்தந்தை பாரிவளன் தலைமையில் வேளாங்கண்ணி மாதாவின் திரு உருவம் பொறித்த திருக்கொடியானது செபஸ்தியார் குருசடியில் இருந்து பவனியாக எடுத்துவரப்பட்டு தேவாலய வளாகத்தில் உள்ள கொடி மரத்தில் விருதுநகர் வட்டார அதிபர் பங்குத்தந்தை அருள்ராயன் கொடி ஏற்றி வைத்தார்
இதன் பின்னர் இறைமக்கள் பங்கு கொண்ட திருப்பலியில் இணைந்து பயணிப்போம் என்று பொருளில் திருப்பலி நிறைவேற்றினர் கொடியேற்றத்துடன் தொடங்கிய இந்த திருவிழா வரும் செப்டம்பர் 8ஆம் தேதி வரை தொடர்ந்து நடைபெறும் திருவிழாவை முன்னிட்டு தினந்தோறும் மாலை வேளையில் அருட் சகோதரிகள் மறைக்கல்வி மாணவர் இளைஞர் இளம் பெண் குழந்தை இயேசு அன்பியம் புனித அன்னை தெரசா அன்பியம் புனித ஆரோக்கிய அன்பியம் மற்றும் கம்பம் கூடலூர் ஆங்கூர்பாளையம் லோயர் கேம்ப் நாராயணத் தேவன் பட்டி கருநாக்க முத்தன் பட்டி குள்ளப்ப கவுண்டன்பட்டி ஆகிய ஊர்களில் உள்ள இறை மக்கள் சிறப்பிக்கும் திருப்பலியை சிறப்பு அழைப்பாளர்கள் ஆன அருட்தந்தைகள் தலைமையேற்று வெகு சிறப்பாக நடத்தி வருகின்றனர்