திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் அருகே உள்ள நார்த்தங்குடி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் பள்ளி மேலாண்மை குழு மறு கட்டமைப்பு கூட்டம் நடைபெற்றது.
கூட்டத்திற்கு அப்பள்ளியின் தலைமை ஆசிரியை நிர்மலா ராஜலட்சுமி தலைமை தாங்கினார், நார்த்தங்குடி ஊராட்சி மன்ற தலைவர் திருமதி சித்திரவேல், பள்ளி ஆசிரியர்கள் முன்னிலை வகித்தனர்.
சி எஸ் ஒ குலாம் மைதீன் மேற்பார்வையில் மேலாண்மை குழு மறு கட்டமைப்பு கூட்டம் நடைபெற்றது.கூட்டத்தில் பள்ளி மேலாண்மை குழு தலைவராக ராதிகா, துணைத் தலைவராக சித்ரா மற்றும் உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
கூட்டத்தில் சுய உதவிக்குழுவினர்,தன்னார்வலர்கள்,முன்னாள் மாணவர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர். தேர்ந்தெடுக்கப்பட்ட மேலாண்மை குழு தலைவர், துணைத் தலைவர் மற்றும் உறுப்பினர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கப்பட்டு, உறுதி மொழி எடுத்துக் கொண்டனர்.