ராணிப்பேட்டை மாவட்டம் சென்னை டு பெங்களூர் தேசிய நெடுஞ்சாலை காவேரிப்பாக்கம் வட்டத்திற்குட்பட்ட ஓச்சேரி அடுத்து சித்தஞ்சி கிராமத்தில் சிவகாளி சித்தர் பீடத்தில்ஆவணி அமாவாசை திருவிழாவெகு விமரிசையாக கொண்டாடப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் காலை 07.00 மணி முதல் 09.00 மணி வரை:- சிவகாளி அன்னைக்கு சிறப்பு மங்கள அபிஷேகம்.
காலை 10.00 மணி முதல் 11.00 மணி வரை
ஸ்ரீ சொர்ணகாளியம்மனுக்கு 18 விதமான மங்கள அபிஷேக தீர்த்த பொருட்களை கொண்டு சிறப்பு மஹா அபிஷேகம். நண்பகல் 12.00 மஹா தீபாராதணை மற்றும் ஸ்ரீ ஸ்ரீ மோகனானந்த சுவாமிகளின் ஆன்மிக அருளுரை.
பகல் 01.00 சிறப்பு அன்னதானம் மற்றும் வாழ்வில் மகிழ்ச்சி பொங்கிட, மகத்தான வாழ்வு பெற்றிட சர்வ தோஷ நிவர்த்தி மஹா சிவகாளி ஹோமம் சிறப்பாக நடைப்பெற்றது.
இந்த ஆவணி அமாவாசை திருவிழாவில் 500க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு அம்மனை தரிசித்தனர் .