5 கோடி மதிப்பிலான கலியமர்த்தன கிருஷ்ணர் உலோக சிலை அமெரிக்காவிலிருந்து இந்தியாவிற்க்கு சிலை கடத்தல் தடுப்புபிரிவினர் மூலமாக மீட்பு .
தமிழ்நாடு சிலை திருட்டு தடுப்புபிரிவின் காவல்துறைத் தலைவர் தினகரன். வழிகாட்டுதலின் படியும் காவல் கண்காணிப்பாளர் சிவக்குமார் மேற்பார்வையில் தனிப்படை அமைத்து, வெளிநாட்டு தனியார் கலைப்பொருட்கள் சேகரிப்பாளர்களால் நடத்தப்படும் அருங்காட்சியகங்கள் கலைக்கூடங்கள் மற்றும் அருங்காட்சியகங்களின் இணையதளங்களில் தமிழ்நாட்டில் உள்ளகோவில்களுக்கு சொந்தமான ஏதேனும் சிலைகள் கடத்தப்பட்டு காட்சிப்படுத்தப்பட்டுள்ளதா என்பது குறித்து இணையதளங்களை ஆய்வு செய்யுமாறு அறிவுறுத்தி தனிப்படை அமைக்கப்பட்டது.
இத்தனிப்படையினர் இணைய தளங்களில் தீவிர விசாரணை மேற்கொண்டபோது, கடந்த 2008 ம் வருடம் நவம்பர் மாதம் லூயிஸ் நிக்கல்சன் என்பவரால் பதிவேற்றம் செய்யப்பட்ட Gold of the Gods என்ற ஒரு கட்டுரையைக் கண்டறிந்தனர். அதில் கலியகல்கி என்ற கலியமர்த்தன கிருஷ்ணர் (குழந்தை கிருஷ்ணர் காலிங்கன் எனப்படும் பாம்பின் மேல் நடனமாடும் நிலையில் உள்ள) உலோக சிலையின் புகைப்படத்தினை வளைத்தளத்தில் கண்டறிந்தனர்.
பின்னர் பல்வேறு இணையதளங்களில் மேற்காணும் சிலை குறித்த தகவல்களையும் தனிப்படையினர் சேகரிக்கத்
தொடங்கினர்.
தாய்லாந்து நாட்டைச் சேர்ந்த டக்ளஸ்லாட்ச் போர்டு கம்போடியா, இந்தியா, தென்கிழக்கு ஆசியா மற்றும் இதரநாடுகளில் உள்ள தொன்மை வாய்ந்த சிலைகள் மற்றும் கலைப்பொருட்களை சேகரிக்கும் பழக்கம் உள்ளவர். மேலும் இவர் பன்னாட்டு கள்ளச் சந்தையில் விற்பது மற்றும் வாங்குவது போன்ற செயல்களை செய்துவருபவர் என்பதையும் கண்டறிந்தனர்.
தொடர் விசாணையில் கலியகல்கி என்ற கலியமர்த்தன கிருஷ்ணரின் உலோக சிலை தற்சமயம் அமெரிக்காவில் உள்ள உள்நாட்டு பாதுகாப்பு விசாரணை என்ற அமைப்பின் கைவசம் இருப்பது தெரியவந்தது.
சிலையை சுபாஸ் சந்திர கபூரிடமிருந்து 2005 ம் ஆண்டு அமெரிக்க டாலர் மதிப்பில் 6.50,000 இந்திய மதிப்பில் ரூ. 52 கோடி) வாங்கியதும்
உலோக சிலை குறித்தான விசாரணையில் தமிழ்நாட்டின் பிற்காலச் சோழர்காலமான 11:12 ஆம் நூற்றாண்டை சேர்ந்தது என்பதும் தெரியவந்தது.
இந்திய தொல்லியல் துறை மூலமாக பெறப்பட்டது. மேற்காணும் சிலையானது. கூடுதல் தலைமை நடுவர் நீதிமன்றம் (சிலைத் திருட்டு சிறப்பு நீதிமன்றம்) கும்பகோணம் வசம் ஒப்படைக்கப்படவுள்ளது
உலோகசிலையினை ,
தமிழ்நாடு காவல்துறை தலைமை இயக்குநர்
சங்கர்ஜிவால்
மற்றும் படைத்தலைவர் நேரில் பார்வையிட்டு சிலையினை மீட்டெடுத்த தமிழ்நாடு சிலைத்திருட்டு தடுப்புபிரிவின் தனிப்படையினரின்
பணியினை பாராட்டினர்.