கும்பகோணத்தில் அகில இந்திய ரியல் எஸ்டேட் கூட்டமைப்பு ஆலோசனை கூட்டம்.
அகில இந்திய ரியல் எஸ்டேட் கூட்டமைப்பு சார்பில் தஞ்சை மண்டல பொறுப்பாளர்கள் மற்றும் உறுப்பினர்கள் 2 ஆம் ஆண்டு
ஆலோசனை கூட்டம் கும்பகோணத்தில்
நடைபெற்றது.
மாநில நிர்வாக செயலாளர் எஸ். பாலாஜி தலைமை தாங்கினார்.
தேசிய துணை தலைவர்கிருஷ்ணகுமார்,மாநில துணை செயலாளர் மாறன் முன்னிலை வகித்தனர்.சிறப்பு அழைப்பாளராக அன்பழகன் எம்.எல்.ஏ, தேசிய
தலைவர் ஹென்றி, நகர் ஊரகமைப்பு இயக்குனரகத்தின் மாவட்ட உதவி இயக்குனர் கார்த்திக் கிருஷ்ணா ஆகியோர் கலந்து கொண்டு பேசினர்.
அப்போது கூட்டத்தில் வயது முதிர்வு மற்றும் உடல் நலம் பாதிப்பு என பதிவு அலுவலக நேரில் வருகை தந்து பதிவு பணியை நடைமுறைப்படுத்த இயலாதவர்களின் நலனை கருத்தில் கொண்டு, அவர்களின் இல்லத்திற்கு சென்று பதிவு செய்யும் தனியார் வருகை நடைமுறை படுத்த உறுதி செய்ய வேண்டும்.
கர்நாடகாவில் உள்ளதுபோல அசையா சொத்துக்கள் பதிவுக்கு முத்திரைத் தீர்வை 5 சதவீதமும்,
பதிவு கட்டணம் சேவை செய்வதற்காக குறைந்தபட்சம் ஒரு சதவிகிதமும் அதிகபட்சமாக 30 ஆயிரம் ரூபாய் எனவும் நிர்ணயித்து நடைமுறை படுத்த வேண்டும்.
தமிழ்நாடு ரியல் எஸ்டேட் ஒழுங்குமுறை ஆணையத்தில் திட்டங்களை பதிவு செய்து உத்தரவு பெற தற்போது அதிக காலதாமதம் ஆகிறது. புதிய வீட்டுமனை பிரிவு திட்டங்களை பதிவு செய்து உத்தரவு பெறுவதற்கு ஏழு தினங்கள் எனவும், கட்டிட திட்டங்களை பதிவு செய்து உத்தரவு பெறுவதற்கு 15 தினங்கள் எனவும் கால அவகாசம் நிர்ணயம் செய்து விரைவாக பதிவு செய்து உத்தரவு வழங்க வேண்டும்
தஞ்சை, கும்பகோணம் மாநகராட்சி முழுமை திட்டங்களை உடனடியாக நடைமுறைக்கு கொண்டு வந்து விரைவில் அனுமதி பெறும் வகையில் தீர்வு காண வேண்டும்,
பாரம்பரிய நகரங்களில் மக்கள் மிகவும் அடர்த்தியாக வசிக்கும் பகுதிகளை கண்டறிந்து முழுமை திட்டத்தில் அவைகளை தொடர் கட்டட பகுதியாக சி.பி.ஏ வகைப்படுத்த வேண்டும்,
பட்டுக்கோட்டை நகராட்சியில் தற்போதுள்ள தனித்த உள்ளூர் திட்ட குழுமத்தின் எஸ்.எல்.பி.ஏ, எல்லையை கணிசமாக விரிவாக்கம் செய்து, ஒருங்கிணைந்த உள்ளூர் திட்ட குழுமத்தினை சி.எஸ்.பி.ஏ. விரைவு படுத்த வேண்டும்,
அதிராம்பட்டினம் மற்றும் திருவையாறு ஆகிய நகராட்சிகளில் புதிய உள்ளூர் திட்ட குழுமங்களை விரைவாக அமைக்க வேண்டும்,
தஞ்சாவூர், திருவாரூர், புதுக்கோட்டை, மயிலாடுதுறை மற்றும் நாகப்பட்டினம் மாவட்டங்களில் கொங்கு மண்டலத்தை போன்று
சிட்கோ மற்றும் சிப்காட் போன்ற தொழிற்பேட்டைகள், சிறப்பு பொருளாதார மண்டலங்கள், ஒருங்கிணைந்த மற்றும் விரிவான சுற்றுலா வளர்ச்சி திட்டங்கள், புதிய விமான நிலையம், துறைமுக மேம்பாடு, தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் போன்றவற்றை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்,
நகர்ப்புற உள்ளாட்சி மற்றும் ஊரக உள்ளாட்சிகளை ஒருங்கிணைத்து ஒற்றை சாளர முறை திட்டத்தில் இறுதி ஒப்புதலையும் இணையதளம் வாயிலாகவே வழங்க வேண்டும் என பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
கூட்டத்தில் மாநில இணை செயலாளர் சம்பத் தலைமை நிலைய செயலாளர்,கார்த்திக்
செயற்குழு உறுப்பினர்கள்
முத்துராமன் முருகப்பன்,
சுரேஷ், பாண்டி, மண்டல பொறுப்பாளர்கள் வெங்கடேசன்,
ஹாஜா மைதீன்,கட்டுமானம் உள்ளிட்ட ரியல் எஸ்டேட் துறை சார்ந்தவர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில்
ஒருங்கிணைப்பாளர்
பிரியகாந்தன் நன்றி கூறினார்.