செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகத்தில் வருகின்ற 23ஆம் தேதி பாரதப் பிரதமர் நரேந்திர மோடி வருகையை பொதுக்கூட்டம் பணி தீவிரமாக நடைபெறும் நிலையில் தமிழ் மாநில காங்கிரசார் சுவர் விளம்பரம் மற்றும் பிரம்மாண்ட பேனர் அமைக்கும் பணியினை செய்து வருகின்றனர்.
மதுராந்தகத்தில் வருகின்ற 23ஆம் தேதி தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில்
அறிவிப்பு பொதுகூட்டம் நடைபெற உள்ளது. இதில் பாரத பிரதமர் நரேந்திரமோடி எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜி.கே.வாசன்,உள்ளிட்ட கூட்டணி கட்சி தலைவர்கள் கலந்து கொள்ள உள்ளனர். இதற்காக 40 ஏக்கர் பரப்பளவில் மேடை அமைக்கும்
பணி நடைபெற்று வருகிறது
இந்நிலையில் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜி.கே.வாசன் ஆணைக்கிணங்க காஞ்சி தெற்கு மாவட்ட தலைவர் மலையூர் புருஷோத்தமன் ஆலோசனைப்படி மாநில இளைஞரணி செயலாளர் செங்கல்பட்டு தெற்கு மாவட்டம்
எடையாளம் சங்கர் ஏற்பாட்டில் சுவர் விளம்பரம் மற்றும் பேனர் அமைக்கும் பணியினை செய்து வருகின்றனர்.
இதில் கட்சியின் பொறுப்பாளர்கள் நிர்வாகிகள் பலர் உடனிருந்தனர்.