தஞ்சாவூர் மாவட்ட செய்தியாளர்.
ஜோ.லியோ யாக்கோப் ராஜ்.
தஞ்சாவூர் பிள்ளையார்பட்டி ஊராட்சி சிங்கப்பெருமாள் நகர் விரிவாக்கம் பகுதியில்
ஸ்ரீ ராஜகணபதி கோவில் புதிதாக கட்டப்பட்டு கும்பாபிஷேகம் நடத்தி தர வேண்டும் என்று பிள்ளையார்பட்டி ஊராட்சி மன்ற நிர்வாகத்திற்கு அப்பகுதி மக்கள் சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டது.
இந்த கோரிக்கையை ஊராட்சி மன்ற தலைவர் உதயகுமார் பரிசிலனை செய்து கோவில் கட்டுவதற்கான முடிவெடுக்கப்பட்டது. அதன்படி சிங்கப்பெருமாள் நகர் சுற்றியுள்ள பொதுமக்களின் பங்களிப்போடு கோவில் கட்டுமான பணிகள் கடந்த சில மாதங்களுக்கு முன்பு நடைபெற்று வந்தது.
இப்பணிகள் முடிந்து ஸ்ரீ ராஜகணபதி மற்றும் அதன் பரிகார தெய்வங்களானமுருகன், வள்ளி தெய்வானை, ஸ்ரீ அனுமன், ஸ்ரீ தட்சிணாமூர்த்தி, ஸ்ரீ பிரம்மா, ஸ்ரீ மகா விஷ்ணு, ஸ்ரீ துர்க்கை அம்மன் ஆகிய தெய்வங்களுக்கு
மகா கும்பாபிஷேகம் நடத்துவது என்று அப்பகுதியில் உள்ள திருமுருகன் நகர், சிங்கப்பெருமாள் நகர், சுப்ரமணியம் நகர், சிங்கபெருமாள் நகர் விரிவாக்கம், சர்மிளா நகர் ஜெயம் நகர் வையாபுரி நகர், வையாபுரி நகர் விரிவாக்கம், விஜயலட்சுமி நகர் மற்றும் கே.ஆர். நகர் பொது மக்களாலும் பிள்ளையார்பட்டி ஊராட்சி நிர்வாகத்தாலும் முடிவு செய்யப்பட்டது.
அதன்படி நேற்று காலை ஸ்ரீ ராஜகணபதிக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. அப்போது அதன் பரிகார தெய்வங்களுக்கும் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. அதைத்தொடர்ந்து 9 மணி முதல் 9.30 மணிக்கு மகா கும்பாபிஷேகம் மிகவும் சிறப்பாக நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில் பிள்ளையார்பட்டி ஊராட்சி மன்றத் தலைவரும், தஞ்சை கிழக்கு ஒன்றிய தி.மு.க. துணைச் செயலாளருமான உதயகுமார் கலந்துகொண்டு சிறப்பித்தார்.
விழாவில் ஒன்றிய கவுன்சிலர்கள் அனைத்து ஊராட்சி மன்ற உறுப்பினர்கள் மற்றும் விழா
கமிட்டினர்கள் மூக்கையன், ரமேஷ், தயாநிதி, தெட்சிணாமூர்த்தி, பாலமுருகன், பார்த்தசாரதி, பால்ராஜ், கார்த்திக், அன்பழகன், மதி மற்றும் ஊராட்சி மன்ற உறுப்பினர் அனந்த சேகரன் ஆகியோர் விழா ஏற்பாடுகளை செய்து இருந்தனர்.