விழுப்புரம் மாவட்டம் கண்டமங்கலம் அருகே உள்ள பக்கிரிபாளையம் கிராமத்தைச் சேர்ந்தவர் நாராயண மூர்த்தி சுமதி தம்பதியினர். இவர்களது மகள் பிரியங்கா வயது 30 தனியார் பள்ளி பட்டதாரி ஆசிரியை இவருக்கும் புதுவை மாநிலம் வில்லியனூர் அடுத்த பிள்ளையார் குப்பம் பகுதியைச் சேர்ந்த கார்த்திகேயன் வயது 37 புதுச்சேரி பொதுப்பணித்துறை ஊழியர். இவர்களுக்கு கடந்த ஆண்டு அக்டோபர் 31ஆம் தேதி திருமணம் நடைபெற்றது.

திருமணத்தின் போது பெண் வீட்டைச் சேர்ந்தவர்கள் 10 சவரன் நகை மற்றும் சீர்வரிசை கொடுப்பதாக மாப்பிள்ளை வீட்டாரிடம் உறுதியளித்துள்ளனர். இந்த நிலையில் திருமணத்தின் போது ஐந்து பவுன் நகை மற்றும் சீர்வரிசை பொருட்கள் கொடுத்து மீதமுள்ள ஐந்து பவுன் நகையை நிலம் விற்று தருவதாக கூறியுள்ளனர். மேலும் 2 1/2 மாதம் ஆகியும் இவர்களால் நகையைபோட முடிவில்லை எனவே இரு வீட்டாருக்கும் இடையே மோதல் போக்கு ஏற்பட்டுள்ளது.

இந்த நிலையில் கார்த்திகேயன் மனைவிக்கு தெரியாமல் பிரியங்காவை ஆபாசமாக புகைப்படம் வைத்துக்கொண்டு 5 சவரன் நகையை உடனடியாக தராவிட்டால் அந்த ஆபாசபுகைப்படத்தை பிரியங்கா பணியாற்றும் பள்ளிக்கும் மற்றும் இணையத்திலும் தானே வெளியிட்டு விடுவேன் என மிரட்டியுள்ளார்.

இதனால் மனமுடைந்த பிரியங்கா நேற்று முன்தினம் மாலை 3 மணி அளவில் தனது தாய் வீட்டில் தூக்கில் தொங்கியுள்ளார். இதனைப் பார்த்த உறவினர்கள் பிரியங்காவை மீட்டு புதுச்சேரி வில்லியனூர் அருகே உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர்.

பிரியங்காவை பரிசோதனை செய்த மருத்துவர்கள் இவர் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறியுள்ளனர். இதுகுறித்து பிரியங்காவின் தாயார் கண்டமங்கலம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இதனைத் தொடர்ந்து விக்கிரவண்டி டிஎஸ்பி சரவணன் மற்றும் கண்டமங்கலம் பொறுப்பு இன்ஸ்பெக்டர் சத்தியசீலன் மற்றும் வருவாய் கோட்டாட்சியர் ஆகியோர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *