பெரியகுளம் அருகே மாவட்ட கண்காணிப்பு அலுவலர் தார் சாலை பணிகள் ஆய்வு தேனி மாவட்டம் பெரியகுளம் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட மேல்மங்கலம் ஊராட்சியில் புதன்கிழமை ஊரக வளர்ச்சித் துறை சார்பில் தமிழக முதல்வரின் கிராம சாலைகள் மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூபாய் 1.39 .கோடி மதிப்பீட்டில் வடுகபட்டி முதல் பெருமாள் பட்டி வரை அமைக்கப்பட்டுள்ள தார் சாலை பணிகளை மாவட்ட கண்காணிப்பு அலுவலர் தமிழ்நாடு மின் உற்பத்தி நிறுவனத்தின் மேலாண்மை இயக்குனர் எம்.கோவிந்தராவ் மாவட்ட கலெக்டர் ரஞ்ஜீத் சிங் முன்னிலையில் ஆய்வு மேற்கொண்டார் உடன் பெரியகுளம் வட்டார வளர்ச்சி அலுவலர் பெ ராகவன் கிராம ஊராட்சி புவனேஸ்வரி வ.ஊ.உள்பட அரசு அலுவலர்கள் பலர் உடன் இருந்தனர்