அரியலூர் ஜனவரி 21- அரியலூர் மாவட்ட காங்கிரஸ் கட்சியின் தலைவராக மாரியம்மாள் பொறுப்பேற்றுக் கொண்டார்.

இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியில், தமிழகம் முழுவதும் உள்ள 71 மாவட்ட அமைப்புகளுக்கு புதிய தலைவர்களை நியமித்து, அக்கட்சியின் தேசிய பொதுச்செயலாளர் வேணுகோபால் உத்தரவிட்டார்.

அதன்படி அரியலூர் மாவட்ட காங்கிரஸ் கமிட்டியின் புதிய தலைவராக, திருமானூரில் வசித்து வந்த, அக்கட்சியின் மாவட்ட மகளிர் அணி தலைவி மாரியம்மாள் நியமிக்கப்பட்டார். இதைத்தொடர்ந்து, அரியலூர் தேரடி அருகே உள்ள காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில், கட்சியின் புதிய மாவட்ட தலைவராக, மாரியம்மாள் பொறுப்பேற்றுக்கொண்டார். அவருக்கு, கட்சியின் அரியலூர் நகர முன்னாள் தலைவர் எஸ்எம் சந்திரசேகர், ஒன்றிய செயலாளர் சுண்டக்குடி தியாகராஜன், கட்சி உறுப்பினர்கள் காரைப்பாக்கம் சசிகுமார், ஜோதிலிங்கம் உள்ளிட்ட பலர், சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்தனர்.

இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின், அரியலூர் மாவட்ட தலைவராக நியமிக்கப்பட்டு பொறுப்பேற்றுள்ள மாரியம்மாள்(49), தஞ்சாவூர் மாவட்டம், பாபநாசம் தாலுக்கா, நாயக்கர் பாளையம் கிராமத்தை சேர்ந்த தியாகி வாசு மூப்பனார் என்பவரது மகள். அரியலூர் மாவட்டம், திருமானூர் அருகே, திருவெங்கனூர் கிராமத்தைச் சேர்ந்த கட்டிடப் பொறியாளர் சிங்காரம் குமார் என்கிற குமார் என்பவருடன் நடைபெற்ற திருமணத்தை தொடர்ந்து, திருமானூர் எஸ்ஆர் நகரில், 20 ஆண்டுகளுக்கு மேலாக குடியிருந்து வந்தார். தற்போது, அரியலூர் பெரிய அரண்மனை தெருவில் வசித்து வரும் இவருக்கு, கனிமொழி என்கிற மகளும், வினோத்குமார் என்கிற மகனும் உள்ளனர்.

கடந்த பல ஆண்டுகளுக்கு முன்பு, திருமானூர் வட்டார மகிளா காங்கிரஸ் தலைவராக நியமிக்கப்பட்ட மாரியம்மாள், அதைத்தொடர்ந்து அரியலூர் மாவட்ட மகிளா காங்கிரஸ் தலைவராக நியமிக்கப்பட்டு, கட்சி பணியாற்றி வந்தார். காங்கிரஸ் கட்சி அறிவித்த பல்வேறு போராட்டங்களிலும் பங்கு பெற்ற மாரியம்மாள், தற்போது காங்கிரஸ் கட்சியின் அரியலூர் மாவட்ட தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.

அரியலூர் மாவட்டத்தில், கிராமங்கள் தோறும் சென்று, காங்கிரஸ் கட்சியை வலுப்படுத்துவதுடன், இளம் தலைவர் ராகுல் காந்தி தலைமையில், மத்தியில் காங்கிரஸ் கட்சியின் ஆட்சி அமைய பாடுபட உள்ளதாகவும் மாரியம்மாள் தெரிவித்தார்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *