மனைவி கோபித்துக் கொண்டு வீட்டை விட்டு சென்றதால் குடிபோதையில் கடலில் தவறி விழுந்து கூச்சலிட்டவரை காப்பாற்றிய சம்பவம் எண்ணூரில் மனைவி கோபித்துக் கொண்டு தாய் வீட்டுக்கு சென்று விட்டதால் குடி போதையில் கடலுக்குள் விழுந்து கிடந்த வாலிபரை மீட்ட ஊர்க்காவல் படை வீரர் எண்ணூர் அன்னை சிவகாமி நகர் 11வது தெருவில் வசித்து வருபவர் ஜெயக்குமார் வயது 25 தனியார் நிறுவனத்தில் ஒப்பந்த அடிப்படையில் வேலை பார்த்து வந்தார். இவர் அடிக்கடி குடித்துவிட்டு வேலைக்கு செல்லாமல் இருந்து வந்துள்ளார்

இதனால் இவரது மனைவி கோபித்துக் கொண்டு திருவல்லிக்கேணியில் உள்ள தாய் வீட்டிற்கு சென்று விட்டார். இதனால் மனமடைந்த ஜெயக்குமார் நேற்று முன் தினம் பெரிய குப்பம் கடற்கரையில் உள்ள தடுப்பு சுவரின் மீது ஏறி அமர்ந்து அளவுக்கு அதிகமாக குடித்துள்ளார்

அப்போது தவறி 20அடி ஆழத்தில் உள்ள கடலுக்குள் விழுந்து விட்டார் கடலுக்குள் விழுந்த அவர் காப்பாற்றும்படி கூச்சலிட்டுள்ளார். அப்போது அந்த பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த ஊர்க்காவல் படை வீரர் சைதாமு சாலையில் சென்ற வாலிபர்களை அழைத்துக் கொண்டு கடலுக்குள் இறங்கி ஜெயக்குமாரை தூக்கி பத்திரமாக மீட்டனர் பின்னர் போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர். போலீசார் அறிவுரை கூறிய எச்சரித்து அனுப்பி வைத்து ஊர்க்காவல் படை வீரர் சைதாமுவை ஆய்வாளர் சந்திரமோகன் பாராட்டினார்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *