மதுரை வட்டாரப் போக்குவரத்து அலுவலகம் வடக்கு மற்றும் பகுதி அலுவலகங்கள் சார்பாக ஓட்டுனர் மற்றும் பொது மக்களுக்கான இலவச கண்பரிசோதனை முகாம் மதுரை வடக்கு வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் நடைபெற்றது.

மதுரை வடக்கு வட்டார போக்குவரத்து அலுவலர் கார்த்திகேயன் முகாமினை தொடங்கி வைத்து பார்வையிட்டார்.

இம்மருத்துவ முகாமில் பயனாளிகளுக்கு கண் பரிசோதனை செய்யப்பட்டது. அதில் 4 நபர்கள் சிறப்பு சிகிச்சைக்காகவும், 14 நபர்கள் கண் அறுவை சிகிச்சைக்கும் பரிந்துரைக்கப்பட்டனர். 37 நபர்களுக்கு கண் குறைபாடுகள் கண்டறியப்பட்டு கண் கண்ணாடிகள் சலுகை விலையில் வழங்கப்பட்டது.

இந்நிகழ்ச்சியில் ஒட்டுநர் ஆட்டோ ஓட்டுநர்கள், வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்திற்கு பழகுநர் உரிமம், ஒட்டுநர் உரிமம் பெற வந்த பொதுமக்கள், வாகன விற்பனை முகவர்கள், ஓட்டுநர் பயிற்சிப் பள்ளி பயிற்றுநர்கள் என சுமார் 240 பேர் கலந்து கொண்டு பயனடைந்தனர்.

இம்முகாமில் வாசன் கண் மருத்துவமனை மருத்துவ குழுவினர் கலந்து கொண்டு மருத்துவ பரிசோதனைகளை மேற்கொண்டனர்.
இந்நிகழ்ச்சியின் இறுதியாக வடக்கு வட்டார போக்குவரத்து (பொ) அலுவலர் கார்த்திகேயன் கூறுகையில் சாலையில் அதிக வேகம், அதிக பாரம். தலைக்கவசம் வாகனத்தை இயக்கும் போது கை பேசி பயன் படுத்துதல் ஆகிய விதி மீறலில் ஈடுபடாமல் விபத்தில்லா தமிழகத்தை உருவாக்கிட அனைவரும் ஒத்துழைப்பு நல்குமாறு வேண்டுகோள் விடுக்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் மோட்டார் வாகன ஆய்வாளர் மாணிக்கம், மற்றும் வட்டார போக்குவரத்து அலுவலரின் நேர்முக உதவியாளர் விஜயராம மூர்த்தி மற்றும் அலவலக பணியாளர்கள் கலந்து கொண்டனர்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *