திருவெற்றியூர்.
மணலியில் சிபிசிஎல் நிறுவனத்தின் சமூக பாதுகாப்பு சிஎஸ்ஆர் நிதியின் மூலம் திருவொற்றியூர் சட்டமன்றத் தொகுதி மணலி நெடுஞ்செழியன் நகரில் பேரிடர் காலங்களில் பாதிக்கப்பட்ட பொதுமக்களை தங்க வைப்பதற்காக ரூபாய் 2 கோடி 59 லட்சம் செலவில் இரண்டு அடுக்குகள் கூடிய சமூக நலக்கூடம் மற்றும் மணலி அரசு உயர்நிலை பள்ளியில் மாணவர்களுக்கான நவீன நூலகம் பள்ளி மாணவர்கள் தங்களது கல்வித் தகுதியை பெருக்கிக் கொள்ளவும் உயர் கல்வி களுக்கு செல்வதற்காக தங்கள் அறிவை மேம்படுத்திக் கொள்ளவும் குறிப்பாக அரசு பள்ளியில் மாணவ மாணவிகள் புத்தகம் வாசிப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பள்ளி வளாகத்திற்கு உள்ளேயே சுமார் 5000 புத்தகங்கள் காட்சிப்படுத்தி மாணவ மாணவிகள் பயன்பெறும் வகையிலும் அதே போன்று படிப்பதற்கான அமைதியான சூழலை ஏற்படுத்தும் வகையில் விசாலமான கட்டிடம் அமைத்து புதியதாக கட்டப்பட்டு முடிவுற்ற கட்டிடத்தை வடசென்னை நாடாளுமன்ற உறுப்பினர் கலாநிதி விராசாமி மற்றும் மாதவரம் சட்டமன்ற உறுப்பினர் சுதர்சனம் மாநகராட்சி மணலி மண்டல குழு தலைவர் ஏ வி ஆறுமுகம். மாநகராட்சி மணலி மண்டல பொறுப்பாளர் தேவேந்திரன். மற்றும் சிபிசிஎல் நிர்வாக இயக்குனர் சங்கர் நிதி இயக்குனர் ரோகித் குமார்.
நிறுவன அதிகாரிகள் மாநகராட்சி அதிகாரிகள் கலந்து கொண்டு ரிப்பன் வெட்டி திறந்து வைத்து பின்னர் கல்வெட்டை திறந்து வைத்து குத்து விளக்கு ஏற்றி வைத்து இரண்டு கட்டிடங்களையும் பயன்பாட்டிற்கு திறந்து வைத்தார்
பள்ளி வளாகத்தில் நூலகத்திற்கு தேவையான புத்தகங்களை வாங்கித் தருவதாகவும் தெரிவித்தார்.