திருவாரூர் மாவட்டம் குடவாசல் அருகே கண்டியூர் ஊராட்சிக்கு உட்பட்ட பெரம்பர்கோவில் கிராமத்தில் அருள்மிகு ஸ்ரீ ஏலவார் குழலி அம்பிகை மற்றும் காமாட்சி அம்பிகை உடனுறை ஸ்ரீ ஏகாம்பரேஸ்வரர் ஆலயத்தின் இராஜ கோபுரம் உட்பட பரிவார தெய்வ கோபுரங்களுக்கு அஷ்ட பந்தன மகா கும்பாபிஷேகம் வெகு விமர்சையாக நடைபெற்றது.
ஆயிரம் ஆண்டுகள் பழைமை வாய்ந்த ஆலயம் சிதளமடைந்து மண்தரையாக கிடந்த ஆலயத்தை புரணமைத்து புதுப்பிக்கப்பட்டுசென்ற புதன் கிழமை விக்னேஸ்வர பூஜையுடன் துவங்கி, கோ பூஜை, கஜபூஜையுடன் துவங்கி, ஆறு கால யாக பூஜைகள் நடைபெற்று
ஆறாம் கால யாக பூஜையின் நிறைவு மகாபூர்ணாஹூதி நடைபெற்று மஹா தீபாராதனை நடைபெற்றது. தொடர்ந்து யாத்ரா தானம் நடைபெற்று கடம் புறப்பாடு மேள தாளங்கள் சிவகன வாத்தியங்கள் முழங்க ஆலயத்தை வலம் வந்து விமான கோபுரத்தை அடைந்தது. அதன் பிறகு வேத விற்பன்னர்கள் வேத மந்திரங்கள் முழங்க விமான கோபுரத்திற்கு புனித நீர் ஊற்றி மஹாகும்பாபிஷேகம் நடந்தது.
பின்ன மூலஸ்தான கும்பாபிஷேகம் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து சுவாமிக்கும்அம்பாளுக்கும் திருக்கல்யாண வைபவம் நடைபெற்றது. மேலும் பக்தர்களுக்கு அருட் பிரசாதமும் அன்னதானமும் வழங்கப்பட்டது.
விழா ஏற்பாடுகளை சென்னை மகாலெட்சுமி குழுவினர் மற்றும் கண்டியூர் கிராம முக்கியஸ்தர்கள் பொதுமக்கள் செய்திருந்தனர்.
விழாவில் சென்னை மஹாலக்ஷ்மி குடும்பத்தார் மற்றும் ஞானசரவணவேல் தமிழ் சேவா சங்க நிறுவனர், விவசாய சங்க பயிரி கிருஷ்ணமூர்த்தி, பாமக முன்னாள் மாநில துணைப் பொதுச் செயலாளர் வேணு.பாஸ்கரன் ஆகியோருடன் திருவாரூர் மாவட்டத்தின் பல பகுதிகளில் இருந்தும் பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.