செங்குன்றம் செய்தியாளர்
செப்.15
விநாயகர் சதுர்த்தி பெருவிழாவை முடித்து விநாயகரை கடலில் கரைக்க இன்று மாலை ஊர்வலமாக வாகனத்தில் எடுத்துச் சென்றனர்.
ரெட்டேரி லட்சுமிபுரம் அருகே புழல் கதிர்வேடு விநாயகபுரம் மற்றும் சுற்றுப்புறத்தில் உள்ள 65 விநாயகர் சிலைகளை சென்னை மெரினா கடலில் கரைப்பதற்காக இன்று பிற்பகல் 2 மணி அளவில் வாகனங்களில் எடுத்துச் சென்றனர்.
சென்னை காவல் இணை ஆணையாளர் விஜயகுமார் தலைமையில் கொளத்தூர் துணை ஆணையாளர் பாண்டியராஜன் ஆலோசனையில் , இன்ஸ்பெக்டர்கள் உதவி இன்ஸ்பெக்டர்கள் மற்றும் போலீசார் பலத்த போலீஸ் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
புழல் சுற்றுப்புறங்களில் உள்ள 65 விநாயகர் சிலைகளின் ஊர்வலத்தை பிஜேபி ஓபிசி அணியின் மாநில செயலாளர் கே ஆர் வெங்கடேசன் கொடியசைத்து துவக்கி வைத்தார். இதில் சென்னை மேற்கு மாவட்ட தலைவர் மனோகரன் மாநில செயற்குழு உறுப்பினர் சென்னைசிவா மாநில பொதுக்குழு உறுப்பினர் சசிதரன் ஆன்மீக பிரிவு மாவட்ட தலைவர் ந.விஜயசாரதி மற்றும் வார்டு கவுன்சிலர் ஞானசுந்தரி குட்டி மோகன் உட்பட பிஜேபியின் நிர்வாகிகள் பலர் உடனிருந்தனர்.
இந்த ஊர்வலத்தில் வாகன ஓட்டிகள் கவனத்துடன் செயல்படுமாறும் ஒரு வாகனத்தை மற்றொரு வாகனம் முந்திக்கொண்டு செல்ல வேண்டாம் எனவும் கட்டுப்பாடு விதித்ததால் அனைத்து வாகனங்களும் அணிவகுத்து சென்றது.