தூத்துக்குடி
மறைந்த தமிழக முதல்வர், பேரறிஞர் பெருந்தகை அண்ணாவின் 116வது பிறந்த நாள் விழா தமிழகம் முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது. அதனை முன்னிட்டு அதிமுக சார்பில் தமிழக முன்னாள் முதலமைச்சரும் அதிமுக பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிசாமி உத்தரவின்படி தூத்துக்குடி தெற்கு மாவட்ட அதிமுக சார்பில் தூத்துக்குடி பழைய மாநகராட்சி அலுவலகத்தில் உள்ள அண்ணாவின் திருவுருவச் சிலைக்கு நேற்று செப்டம்பர் 15 தூத்துக்குடி தெற்கு மாவட்ட அதிமுக செயலாளரும் முன்னாள் அமைச்சருமான எஸ்.பி.சண்முகநாதன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தி, இனிப்புகளை வழங்கினார்.
