C K RAJAN
Cuddalore District Reporter
9488471235..
கடலூர் மாவட்டம் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் மற்றும் தாம் அளித்த வாக்கினை சரிபார்க்கும் கருவியை பயன்படுத்துவது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் செயல்முறை விளக்க மையங்கள் அமைக்கப்பட்டுள்ளது
மாவட்ட ஆட்சித்தலைவர் சிபி ஆதித்யா செந்தில்குமார் தெரிவித்துள்ளார்
கடலூர் மாவட்டத்தின் 9 சட்டமன்ற தொகுதிகளுக்கு நடைபெறவுள்ள பொதுத் தேர்தலை முன்னிட்டு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் மற்றும் வாக்காளர் தாம் அளித்த வாக்கினை சரிபார்க்கும் கருவி ஆகியவற்றின் முதல் நிலை சரிபார்ப்பு பணிகள் முடிந்த பின்னர். பயிற்சி மற்றும் விழிப்புணர்வு நோக்கத்திற்காக, அங்கீகரிக்கப்பட்ட தேசிய மற்றும் மாநில அரசியல் கட்சிகள் பிரதிநிதிகள் முன்னிலையில் 21.01.2026 அன்று 233 எண்ணிக்கை கட்டுப்பாட்டுக் கருவிகள் (Control Units), 233 எண்ணிக்கை வாக்குப்பதிவுக் கருவிகள் (Ballot Units) மற்றும் 233 எண்ணிக்கை வாக்காளர் தாம் அளித்த வாக்கினை சரிபார்க்கும் கருவிகள் ஆகியவை 9 சட்டமன்ற தொகுதிகளுக்கு அனுப்பப்பட்டுள்ளன.
பயிற்சி மற்றும் விழிப்புணர்விற்காக எடுக்கப்பட்டுள்ள மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் மற்றும் வாக்காளர் தாம் அளித்த வாக்கினை சரிபார்க்கும் கருவிகளின் பட்டியலும் அங்கீகரிக்கப்பட்ட தேசிய மற்றும் மாநில அரசியல் கட்சிகளிடம் அளிக்கப்பட்டுள்ளது.
இந்தியத் தேர்தல் ஆணையத்தால் வெளியிடப்பட்ட வழிகாட்டிக் குறிப்புகளின்படி பயிற்சி மற்றும் விழிப்புணர்விற்கான மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் மற்றும் வாக்காளர் தாம் அளித்த வாக்கினை சரிபார்க்கும் இயந்திரங்கள் நெய்வேலி தனித்துணை ஆட்சியர் அலுவலகம் (நி.எ) மற்றும் திட்டக்குடி, விருத்தாச்சலம். பண்ருட்டி, கடலூர், குறிஞ்சிப்பாடி, அலுவலகங்களிலும் புவனகிரி, சிதம்பரம், காட்டுமன்னார்கோயில் ஆகிய வட்டாட்சியர் வைக்கப்பட்டுள்ளன.
மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் மற்றும் வாக்காளர் தாம் அளித்த வாக்கினை சரிபார்க்கும் கருவிகளில் எவ்வாறு வாக்களிப்பது என்பது குறித்து பொதுமக்கள் அறிந்து கொள்ளும் வகையில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் மற்றும் வாக்காளர் தாம் அளித்த வாக்கினை சரிபார்க்கும் கருவிகளின் செயல்முறை விளக்கத்தை அளிப்பதற்கு, மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களின் செயல்முறை விளக்க மையங்கள் மாவட்ட தேர்தல் அலுவலகம் கடலூர், வருவாய் கோட்ட அலுவலகங்கள், கடலூர்/ சிதம்பரம் மற்றும் விருத்தாச்சலம் ஆகிய இடங்களில் அமைக்கப்பட்டுள்ளன.
வாக்குப்பதிவு இயந்திரங்களின் செயல்முறை விளக்க மையங்கள்
(EVM Demonstration Centre) நீங்கலாக, அனைத்து வாக்குச் சாவடி பகுதிகளை /தொகுதிகளைச் சென்றடையும் வகையில், விழிப்புணர்வு நோக்கத்திற்காக 09 நடமாடும் செயல்விளக்க வாகனங்கள் (Mobile Demonstration Van) பயன்படுத்தப்படவுள்ளது.
மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் மற்றும் வாக்காளர் தாம் அளித்த வாக்கினை சரிபார்க்கும் கருவிகளின் செயல்முறை விளக்கம் குறித்த விழிப்புணர்வு, இந்தியத் தேர்தல் ஆணையம், தேர்தல் நாளை அறிவிக்கும் வரையில் தொடர்ந்து நடத்தப்படும். அதன் பின்னர். மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் மற்றும் வாக்காளர் தாம் அளித்த வாக்கினை சரிபார்க்கும் கருவிகள் குறித்த விழிப்புணர்வு, மின்னணு ஊடகங்கள் வாயிலாக மட்டுமே மேற்கொள்ளப்படும் என மாவட்ட ஆட்சித்தலைவர் சிபி ஆதித்யா செந்தில்குமார் தெரிவித்துள்ளார்.