தாராபுரம் செய்தியாளர் பிரபு
செல்:9715328420
தாராபுரம் வட்ட சட்டப் பணிகள் குழு மற்றும் தாராபுரம் வட்டார போக்குவரத்து அலுவலகம் இணைந்து நடத்திய ‘சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு
பேரணி தாராபுரம் சார்பு நீதிமன்ற வளாகத்தில் தாராபுரம் முன்றாவது மாவட்ட கூடுதல் நீதிபதி சரவணன் கொடியசைத்து துவக்கப்பட்டது.
தாராபுரம் வட்ட சட்டப் பணிகள் குழு தலைவரும் சார்பு நீதிபதியுமான சக்திவேல். மாவட்ட உரிமையியல் நீதிபதி . பாண்டி மகாராஜா, குற்றவியல் நடுவர் உமா மகேஸ்வரி தாராபுரம் வழக்கறிஞர்கள் சங்க தலைவர் தென்னரசு, செயலாளர் சிவக்குமார், மூத்த வழக்கறிஞர்கள் கார்வேந்தன், மணிவண்ணன், தாராபுரம் வருவாய் கோட்டாட்சியர் பெலிக்ஸ் ராஜா, காவல் துணை காண்காணிப்பாளர் சுரேஷ்குமார், வட்டார போக்குவரத்து அலுவலர் பழனியப்பன் ‘போக்குவரத்து காவல் ஆய்வாளர் சஜினி வட்டார போக்குவரத்து வாகன ஆய்வாளர் சரவணக்குமார் அனைவரையும் வரவேற்றார்
700 மேற்பட்ட தனியார் கல்லூரி மாணவ மாணவிகள் விழிப்புணர்வு பதாகைகளை ஏந்தி . நடைபயணம்மாக தாராபுரம்,காவல் துறையினர், ஊர் காவல் வீரர்கள், வட்டார போக்குவரத்து
அலுவலக ஊழியர்கள் போன்றோர் தலைக் கவசம் அணிந்துச் இரு சக்கர வாகனங்களிலும் வாகன ஒட்டுநர் பயற்சி பள்ளியினர் நாள்கு சக்கர வாகனங்களில் சீட்பெல்ட் அணிந்தும் சென்றனர். பேரணியை துவங்கும் முன் நீதிபதிகள் சாலை பாதுகாப்பு மாணவிகள் மாணவ முன்பாக பற்றிய உறுதிமொழி ஏற்றனர். மேலும் நீதிபதி பேசுகையில் விபத்துக்களினால் ஏற்படும் வழக்குகள் பற்றியும் அதன் விளைவுகள் பற்றியும் பிரசுரங்கள் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டது பேரணி நீதிமன்ற வளாகத்தில் தொடங்கி கச்சேரி சாலை, பூக்கடை கார்னர் பொள்ளாச்சி ரோடு, பைபாஸ் சாலை வழியாக சென்று வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் நிறைபெற்றது.