நீலகிரி மாவட்டம் மேல் கூடலூர் நூருல் இஸ்லாம் மத்ரஸா மற்றும் தர்கா கமிட்டி சார்பாக முஸ்லிம்களின் முக்கிய விழாவான மிலாடி நபி மிக சிறப்பாக கொடியேற்றதுடன் தொடங்கி கொண்டாடப்பட்டது.
கமிட்டி தலைவர் பசீர் கொடியினை உயர்த்தி விழாவிற்கு தலைமை வகித்தார்.இஸ்லாமிய பெருமக்கள் தங்களது மகிழ்ச்சியினை தெரிவிக்கும் விதமாக மதரஸா குழந்தைகளின் கலை நிகழ்ச்சிகளுடன் ஊர்வலமாக சென்றனர்.
இதில் பெருந்திரளான இஸ்லாமிய சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை சென்றனர். ஜாதி மதம் பாராமல் உள்ளூர் பகுதியை சேர்ந்த பொதுமக்கள் இனிப்புகளை வழங்கி இஸ்லாமிய மக்களை வரவேற்று தங்களது வாழ்த்துக்களை தெரிவித்தனர்