ஈரோடு மாவட்டம் அந்தியூர் ரவுண்டானாவில், பெரியாரின் பிறந்த நாள் விழா, அந்தியூர் ஒன்றிய விசிக செயலாளர் சிறுத்தை தங்கராசு தலைமையில் நடைபெற்றது.
அங்கு வைக்கப்பட்டிருந்த பெரியாரின் திரு உருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்து, இனிப்பு வழங்கி, வீரவணக்கம் செலுத்தப்பட்டது.
இந்த நிகழ்ச்சியில், மாநில செயற்குழு உறுப்பினர் கிருஷ்ணன், மாவட்ட ஊடக மைய அமைப்பாளர் சுரேஷ் செங்கோடன், அந்தியூர் ஒன்றிய பொருளாளர் துரை வளவன், விவசாய அணி மாநில துணை செயலாளர் பழனிச்சாமி, ஆசிரியர் சந்தானம், விடுதலை கலை இலக்கியப் பேரவை மாநில துணை செயலாளர் செல்லமுத்து, மாவட்ட மகளிர் அணி செயலாளர் சீதா கௌரி, துணைச் செயலாளர் ஸ்டெல்லா, கீதா, அம்பேத்கர் மக்கள் கட்சி கொள்கை பரப்பு செயலாளர் கண்ணன், ராதாகிருஷ்ணன்,
மாதேஸ்வரன்,
மாரி
உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.