கடலூர் மாவட்டம் விருத்தாசலத்தில் தந்தை பெரியார் அவர்களின் 146 வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு நீதிமன்ற வளாகம் அருகே உள்ள பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர் .

பின்பு தொழிலாளர் நலன் திறன் மேம்பாட்டு துறை அமைச்சர் அவர்கள் இல்லத்தில் பெரியார் அண்ணா கலைஞர் படங்களுக்கு மாலை அணிவித்து மரியாதை செய்தனர்.

நடைபெறும் திராவிட முன்னேற்றக் கழகத்தின் 75 ஆவதுஆண்டு விழாவை முன்னிட்டு அரங்கில் திமுகவினர் கூடினர்.இதில் நகர மன்ற தலைவர் சங்கவி முருகதாஸ் முன்னிலை வகித்தார்.

நகரம் செயலாளர் தண்டபாணி வரவேற்புரை ஆற்றினார். ஆதிதிராவிட நல செயலாளர் ராமு மற்றும் வெங்கடேஸ்வரா கல்வி குழும தலைவர் வெங்கடேசன் ஒன்றிய செயலாளர் கனக கோவிந்தசாமி வேல்முருகன் கலந்து கொண்டனர். சிறப்பு அழைப்பாளராக எழுத்தாளர் இமயம் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *