திண்டுக்கல் மாவட்டம் பழனி இரயிலடி சாலையில் தந்தை பெரியாரின் 146 ஆவது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு அவரது சிலைக்கு விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பாக ஊர்வலமாக வலம் வந்து பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்தனர்.
தொடர்ந்து இந்நிகழ்வின் தலைமையாக திண்டுக்கல் மேற்கு மாவட்ட செயலாளர் திருவளவன் மண்டல செயலாளர் ஜலால் முகமது மாவட்ட பொருளாளர் திருமாறன் மாவட்ட செய்தி தொடர்பாளர்
பொதினிவளவன் மாவட்ட துணைச் செயலாளர் பாவேந்தன் ஆகியோர் தலைமையில் விழா நிகழ்ச்சி நடைபெற்றன.
மேலும் இந்நிகழ்வில் குமாரசாமி, ஜெய்சீலன், தமிழன்னண், காளிமுத்து, மணிகண்டன்,
அப்துல் கலாம் ஆசாத், வாஞ்சிநாதன், மூர்த்தி, பிரபு, மில்லர் மண்டேலா, சுரேஷ்குமார்,ஆனந்தன், முரளி, வளவன்வாய்கால், சிங்காரம், ஓவிய ராஜா, கலை, டைகர் வேலு, சரஸ்வதி வாஞ்சிநாதன், சிடிசி மணி, கன்னிமுத்து ,சபீக்,சின்ன கணேசன், குள்ளமணி, அர்ஜுனன், கிள்ளிவளவன், கார்த்திக், ஆபிரகாம்,
சிறுத்தை ஹாஜி பாபு, உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டு தந்தை பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்தனர்.
தொடர்ந்து பெரியாரின் புகழ் பாடும் விதமாக பல்வேறு கோஷங்களை எழுப்பியவாறு ஊர்வலமாக வந்து விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பாக மரியாதை செய்தனர்.
இதனைத் தொடர்ந்து திராவிடர் கழகம் திராவிடர் விடுதலைக் கழகம் பெரியார் திராவிடர் கழகம்
திமுக,அதிமுக மற்றும் தமிழ் புலிகள் கட்சி, இந்திய தேசிய காங்கிரஸ் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி
இந்திய குடியரசு கட்சி உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டு பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து பிறந்தநாள் விழாவை கொண்டாடி மகிழ்ந்தனர்.