தர்மபுரி மாவட்டம் மொரப்பூர் வனச்சரக அலுவலர் ஆனந்த் குமார் அவர்களுக்கு கிடைத்த தகவலின் படி நேற்று இரவு . அரூர் வனச்சரகம் கொளகம்பட்டி – சிந்தல் பாடி சாலையில் உள்ள காப்புக்காட்டில் இருசக்கர வாகனத்தில் துப்பாக்கியுடன் வனவிலங்குகளை வேட்டையாட சேலம் மாவட்டம் பெருமாம்பட்டி பகுதி சேர்ந்த கோவிந்தராஜ் 22 மான் பன்றி உள்ளிட்ட வனவிலங்குகளை வேட்டையாட சென்றபோது அவரை கைது செய்த வனத்துறையினர் .
பின் மாவட்ட வன அலுவலர் ராஜாங்கம் உத்தரவின் படி அவருக்கு 1.50.000 (ஒன்றரை லட்சம்) அபராதம் விதித்தனர் மேலும் தப்பி ஓடிய சேலம் மாவட்டம் பெருமாம்பட்டி சேர்ந்த வடிவேல் மகன் பூபதி என்பவரை தனிப்படை அமைத்து வனத்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்